இந்த 4 பொருட்களை பயன்படுத்தினால் போதும் ஜென்மத்திற்கும் எலி தொல்லை இருக்காது!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க.. 100% ரிசல்ட் கிடைக்கும்!!
நம் வீட்டில் ஒரு முறை எலி புகுந்து விட்டால் அதனை வெளியேற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை.இவ்வாறு உணவு பொருட்களை உண்டு நமக்கு அதிகளவு பயத்தை காட்டி வரும் எலிகளை வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து எளிதில் விரட்டி விட முடியும்.இதனால் வீட்டில் எப்பொழுதும் எலி தொல்லை இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும்.
தேவையான பொருட்கள்:-
*வாடிய மிளகாய் – 4
*கோதுமை மாவு – 2 கப்
*வாஷிங் லிக்விட் – 1 தேக்கரண்டி
*வினிகர் – 1 தேக்கரண்டி
செய்முறை:-
1.முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் கோதுமை மாவு சேர்த்து கொள்ள வேண்டும்.ஒருவேளை கோதுமை மாவு இல்லையென்றால் மக்காச்சோள மாவு,கடலை மாவு இதில் ஏதுனும் ஒன்றை பயன்படுத்தலாம்.
2.அதில் வினிகர் மற்றும் வாஷிங் லிக்விட் 1 தேக்கரண்டி சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ண வேண்டும்.
3.பழுத்து சிறிது காய்ந்த நிலையில் இருக்கும் காரமான பச்சை மிளகாய் 4 எடுத்து ஒன்று இரண்டாக அரைத்து அந்த கலவையில் சேர்த்து கொள்ள வேண்டும்.
4.பிறகு ஒரு நியூஸ் பேப்பர் எடுத்து அவற்றை ஓரளவிற்கு கட் செய்து அதில் தயார் செய்து வைத்துள்ள பேஸ்டை முழுவதுமாக தடவி கொள்ள வேண்டும்.
5.வீட்டில் எலிகள் நடமாட்டம் அதிகம் காணப்படும் இடத்தில் அந்த பேஸ்ட் தடவிய பேப்பரை வைக்க வேண்டும்.
6.இந்த பேஸ்ட்டை எலிகள் உண்ணும் பொழுது அதன் வாசனையால் எலிகள் வீட்டை விட்டு ஓடிவிடும்.இதனால் வீடுகளில் எலிகள் தொல்லை இல்லாமல் அவை அடியோடு ஒழிந்து விடும்.