இனி இந்த எண்ணிற்கு  வாட்ஸ் அப் செய்யுங்ககள் போதும்! அரசு வெளியிட்ட புதிய வசதி!

0
224
Just WhatsApp this number! The new facility released by the government!

இனி இந்த எண்ணிற்கு  வாட்ஸ் அப் செய்யுங்ககள் போதும்! அரசு வெளியிட்ட புதிய வசதி!

நேற்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் கூறுகையில் தமிழகத்தை போதை பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என கூறினார்.மேலும் அந்த ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள், தலைமை செயலாளர் மற்றும் அமைச்சர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.அப்போது அந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் போதை பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்க உத்தரவிட்டுள்ளார்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருளால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,மருந்து கடைகளில் தீவிர சோதனை நடத்தவும் காவல்துறையினர் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.அதற்கு ஏதுவாக இருக்க காவல்துறை சார்பில் தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து பொதுமக்கள் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக 9498111191 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

தற்போது தமிழகத்தில் போதைப் பொருட்களை அடியோடு ஒழிக்க தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் காவல்துறையினர் தீவிரமாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கபடுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.