இறந்த சிறுமிக்கு கிடைத்த நீதி! ராணுவ அதிகாரிக்கு நீதிபதி அளித்த தக்க தண்டனை!
காலகாலமாக பெண்களுக்கு எதிராக பல வன்கொடுமைகள் நடந்து வருகிறது.கடந்த காலத்தில் பெண்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகள் ஏதும் வெளி கொண்டு வரவில்லை.தற்பொழுது பெண்கள் விழிப்புணர்வுடன் தங்களுக்கு ஏற்படும் அவலத்தை அவ்வபோது கூறிவருகின்றனர்.அந்தவகையில் தேனீ மாவட்டம் சீப்பாளகோட்டை என்ற பகுதியை சேர்ந்தவர் தான் இராணுவ வீரர் பிரபு.இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது உறவினரின் 15 வயது தக்க சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.
அவர் திருமணம் செய்து கொண்டது மட்டுமின்றி அந்த சிறுமியை தான் வசிக்கும் இராணுவ விடுதிக்கு அதிகம் வயது ஆனதுபோல காண்பித்து அழைத்து சென்றுள்ளார்.அதுமட்டுமின்றி இந்த திருமணம் ஓர் பக்கம் குழந்தை திருமணம் என்று கூறினாலும் மறு பக்கம் அந்த சிறுமியின் விருப்பத்திற்கு மாறாக நடத்தப்பட்டது.அந்த சிறுமியை தனது விடுதிக்கு அழைத்து சென்று அந்த இராணுவ வீரர் பல கொடுமைகள் செய்துள்ளார்.முதலில் அந்த சிறுமியை வீட்டை விட்டு வெளியே வர விடாமல் உள்ளேயே அடைத்து வைத்து துன்புறுத்தியுள்ளார்.
ஏனென்றால் அந்த சிறுமி வெளியே வந்து அக்கம் பக்கத்தினரிடம் உண்மையை உரைத்து விட கூடாது என்பதற்காக வீட்டினுள்ளே வைத்து மன உளைச்சல் கொடுத்துள்ளார்.இது வெகு நாட்களாக நடக்கவே சிறுமியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.அதனையடுத்து சிறுமி அந்த விடுதியில் இருந்து தப்பித்து மதுரை மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இராணுவ வீரர் பிரபு மீது புகார் அளித்துள்ளார்.இவர் புகாரின் அடிப்படையில் அந்த இராணுவ வீரர் பிரபுவை போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அந்த சிறுமியின் பெற்றோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.அதனையடுத்து இந்த வழக்கானது இன்று மதுரை போக்சோ நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இராணுவ வீரர் பிரபு மற்றும் அந்த சிறுமியின் பெற்றோர்கள் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கபட்டு தண்டனை வழங்கப்பட்டது.அந்தவகையில் இராணுவவீரர் பிரபுவிற்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.
அந்த சிறுமியின் பெற்றோருக்கு 2 ஆண்டுகாலம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி ரூ.5 ஆயிரம் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.இந்த வழக்கின் முக்கிய நபரான அந்த சிறுமி சில வருடங்களுக்கு முன் உடல்நலக் குறைவால் உயிரிழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை பெற்றுக்கொடுத்ததால் மதுரை அனைத்து மகளிர் காவல் துறையினரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பாராட்டினர்.