Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“அறுவை சிகிச்சை… கொரோனா தொற்று…” விளக்கமளித்து கே எல் ராகுல் பதிவு!

“அறுவை சிகிச்சை… கொரோனா தொற்று…” விளக்கமளித்து கே எல் ராகுல் பதிவு!

இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக கே எல் ராகுல் சில மாதங்களாக இடம் கிடைக்காமல் இருந்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக சீராக ரன்களை சேர்த்து இந்திய அணியில் தனககான இடத்தை தக்கவைத்துள்ளார் கே எல் ராகுல். இந்திய அணிக்கு துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இப்போது காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறிய அவர் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று திரும்பினார்.

இதற்கிடையில் சிகிச்சையில் குணமான அவர் அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இப்போது அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரில் இருந்து விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்நிலையில் கே எல் ராகுல் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் “எனது அறுவை சிகிச்சை ஜூன் மாதத்தில் வெற்றிகரமாக முடிந்தது. நான் பயிற்சிகள் மேற்கொண்டு அணியில் இணைய இருந்த நேரத்தில் கொரோனா தொற்றால் மேலும் சில நாட்கள் பின்னடைவாகியுள்ளது. ஆனால் நான் இப்போது வேகமாக குணமாகி வருகிறேன். விரைவில் அணித்தேர்வுக்கு தயாராக இருப்பேன்” எனக் கூறியுள்ளார்.

Exit mobile version