16வது சட்டசபை தற்காலிக சபாநாயகர் பதவி ஏற்பு!

0
98

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ஆட்சி அமைந்திருக்கின்ற ஒரு சூழ்நிலையில், அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக கடந்த 7ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் சேர்ந்து 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டார்கள்.இதற்கிடையில் தமிழகத்தின் பதினாறாவது சட்டசபை கூட்டத்தொடர் மே மாதம் 11ஆம் தேதி அதாவது நாளை நடைபெற இருப்பதாக தமிழக அரசு அறிவித்தது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் இந்தக் கூட்டம் நாளை காலை பத்துமணியளவில் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல சட்டசபை கூட்டத்திற்கு வரும் அனைவரும் சட்டசபை உறுப்பினர் சான்றிதழுடன் வரவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.. மேலும் 12ஆம் தேதி காலை பேரவை தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல 12 தேதி சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கூட்டத்தொடரின் முதல் தினத்தில் புதிய சட்டசபை உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக, தற்காலிக சபாநாயகராக கீழ்பெண்ணாத்தூர் சட்டசபை உறுப்பினர் பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். தற்காலிக சபாநாயகராக இருந்து வரும் அவர் சட்டசபை உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்று சொல்லப்படுகிறது.இவ்வாறான சூழ்நிலையில், தமிழக சட்டசபை தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.