ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையம் அருகே நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதல்! 13 அமெரிக்க படையினர் உயிரிழப்பு!

0
144

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பல நாடுகள் தங்களுடைய குடிமக்களை அவசர அவசரமாக வெளியேறி வருகிறார்கள். இந்த நிலையில், நேற்றைய தினம் மாலை காபூல் விமான நிலையத்தில் 2 தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்று இருக்கின்றன. இந்த தாக்குதலில் சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்று செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்து இருக்கின்றன.

அமெரிக்கா மற்றும் மற்ற நாடுகள் தங்களுடைய நாட்டு மக்களை வெளியேற்றுவதற்காக மிகப்பெரிய அவசரத்தில் காபூல் விமான நிலையத்தில் இந்த தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. பல தினங்களாக நாட்டை விட்டு வெளியேற விரும்பாத ஆப்கானிஸ்தானிய மக்கள் சில தினங்களாக விமான நிலையத்தில் குவிய தொடங்கினார்கள்.

இந்த சூழ்நிலையில்தான் காபூல் விமான நிலையத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இப்படி நடத்தப்பட்ட தாக்குதலில் பல அமெரிக்க படையை சார்ந்த ஊழியர்கள் பலியானதை எங்களால் உறுதிப் படுத்த இயலும் பலர் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று பென்டகன் பத்திரிக்கை செய்தி யாளர் ஜான் கிரிஸ்பி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. காபூல் விமான நிலையத்தில் சுமார் 5,200 அமெரிக்க படையினர் பாதுகாப்பு வழங்கி வருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

நேற்றைய தினம் மாலை முதல் குண்டுவெடிப்பு விமான நிலையத்தின் வாயிலில் நடைபெற்றது இந்த பகுதியில் அமெரிக்க படையை சார்ந்தவர்கள் நிலை கொண்டிருந்தார்கள். இந்த தாக்குதலில் உடனடியாக 13 பேர் பலியானார்கள் மற்றும் இன்னும் பலர் காயமடைந்திருக்கிறார்கள் இங்கிலாந்து துருப்புகள் மற்றும் ஊழியர்கள் தங்கியிருக்கும் விமான நிலையத்திற்கு அருகில் இருக்கின்ற விடுதிக்கு அருகில் இரண்டாவது தாக்குதல் நடந்தது. ஆகவே இது வெளிநாட்டு படையினரை குறிப்பாக அமெரிக்க நேட்டோ படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் ஆகவே பார்க்கப்படுகிறது.

அதோடு இந்த இரண்டு தாக்குதல்களிலும் தற்கொலை குண்டுகளுடன் ஐ இ டி என சொல்லப்படும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் இணைக்கப்பட்டு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இரட்டை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த ஒரு சில மணி நேரங்களுக்குப் பின்னர் ஐஎஸ்ஐஎஸ் கொரசன் அமைப்பு தாக்குதலுக்குப் பொறுப்பேற்று இருக்கிறது.

ஐஏஎஸ் குழுவைச் சார்ந்த தற்கொலை படைவீரர் காபூல் விமான நிலையத்திற்கு அருகே இருக்கின்ற பரான் கேம்பில் அமெரிக்க ராணுவத்துடன் இருக்கும் மொழிபெயர்ப்புகள் உடன் ஒன்றிணைந்து கூட்டத்தை அடைய இயன்றது. அவர்களுக்கு இடையே வெடிகுண்டை வெடிக்கச் செய்து விட்டார். இதில் அமெரிக்க படையினர் தாலிபான் போராளிகள் பொதுமக்கள் உள்ளிட்ட சுமார் 72 பேர் பலியானார்கள் என அந்த அமைப்பு தகவல் வெளியிட்டு இருப்பதாக செய்தி நிறுவனங்கள் சார்பாக கூறப்படுகின்றது இந்த அறிக்கையின் இரண்டாவது தற்கொலை தாக்குதல் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தாலிபான்கள் அமெரிக்க அரசுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அதை எதிர்க்கும் விதத்தில் தான் ஐஏஎஸ் தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்த இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இந்த தாக்குதலுக்கு வெளிநாட்டு சக்திகள் காரணம் என்று தாலிபான்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

தாலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபி குல்லா முஜாஹித் கூறியதாவது, காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடைபெற்ற இந்த தாக்குதலை நாங்கள் மிகக்கடுமையாக கண்டிக்கின்றோம். அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற இடங்களில் நடைபெற்றது என தெரிவித்தார்.

இஸ்லாமிக் ஸ்டேட் கோரசன் என்று சொல்லக்கூடிய அமைப்பு இஸ்லாமிய அரசின் மத்திய ஆசிய மாகாணங்களை மையமாகக் கொண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமானது. இது நவீன ஈரான் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளை உள்ளடக்கிய அமைப்பாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 100 தாக்குதல்களுக்கும் 2017 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளுடன் சுமார் 250 மாணவர்களுக்கும் ஒரு பெற்று இருக்கிறது. தாலிபான்கள் மேற்கு நாடுகளுடன் மென்மையான போக்கில் இருக்கிறார்கள் என நினைத்துதான் இந்த தாக்குதலில் தாலிபான்கள் அமெரிக்கப் படைகள் ஆகிய இருவரையும் கொலை செய்திருக்கிறது. இந்த அமைப்பு அதேநேரம் ஆப்கானிஸ்தான் நிலைமையை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றது இந்தியா.