காபுல் விமான நிலையத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு! கலக்கத்தில் பொது மக்கள்!
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை தற்போது கைப்பற்றி உள்ளதால் அங்கு சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளும் தம் நாட்டு மக்களை மீட்க தீவிரம் காட்டி வருகின்றன. இதற்காக விமானங்கள் மூலம் மக்களை தொடர்ந்து மீட்கவும் செய்கின்றனர். சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஆப்கன் மக்களையும் பல நாடுகள் மீட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மீட்பு பணிகள் காபூல் விமான நிலையத்தில் நடைபெற்று வருவதால் பல நூறுக்கணக்கான மக்கள் அங்கு கூடி இருக்கிறார்கள். மேலும் அணைத்து மக்களும் தங்களை யாரேனும் அழைத்து செல்ல மாட்டார்களா? என்ற ஏக்கத்தில் காத்துக் கொண்டு உள்ளனர். குழந்தைகள் தாகத்திலும், பசியிலும் வாடி வதைக்கப் படுகின்றனர்.
இதன் காரணமாக காபூல் விமான நிலையத்தை அமெரிக்கப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் காரணத்தால் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து ஐஎஸ் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் குண்டுவெடிப்பு தாக்குதல் ஒன்றை நடத்தினார்கள். விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஹரசன் பிரிவு பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அநியாயமாக உயிரிழந்தனர்.
நேற்று வரை இந்த உயிரிழப்பு 75 ஆக இருந்த நிலையில் தற்போது அந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பதிமூன்று பேர் அமெரிக்க பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். மீதமுள்ள மக்கள் ஆப்கானிஸ்தானின் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சாதாரண பொதுமக்கள் என்றும் செய்திகள் சொல்கின்றன.