குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள் – 2021 கடகம்
மகரத்தில் இருந்து அதிசாரமாக கும்ப ராசிக்கு சென்றுள்ள குரு பகவான் 21 – 6 – 2021 அன்று வக்கிரம் ஆகி, 18 – 10 2021 அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார்.
அதேபோல் கடந்த 23-5-2021 அன்று மகரத்தில் வக்ரம் ஆன சனி பகவான், 11-10-2021 அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார்.
எனவே, குரு மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களின் வக்ர கதியை கணக்கில் கொண்டே, ஒவ்வொரு ராசிக்கும் பலன்களை அறிய வேண்டும்.
அந்த வகையில், கடக ராசிக்கு எட்டாம் இடமான கும்பத்திற்கு அதிசாரமாக சென்றுள்ள குரு தற்போது வக்கிரம் அடைந்துள்ளார்.
பொதுவாக எட்டாம் இடத்தில் உள்ள குரு, தொட்டது அனைத்திலும் நஷ்டத்தை தந்திருப்பார். ஆனால், அதே இடத்தில் வக்கிரம் ஆகும் குரு பகவான், நல்ல மாற்றங்களை தருவார்.
தடை பட்ட பண வரவுகளை மீண்டும் தொடங்கி வைப்பார். கரைந்த முதலீடுகள் மற்றும் சேமிப்புகளை மீண்டும் ஏற்படுத்தி தருவார்.
நீண்டநாள் நிலுவையில் இருந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டு வருவார். தீராத நோய்கள் மற்றும் பிரச்சினைகள் தீரவும் வழி வகுத்துக் கொடுப்பார்.
சேமிப்புகள் ஏற்கனவே கரைந்து இருந்தால், மீண்டும் சேமிப்புகள் உருவாகும். இல்லையெனின் பணத்தை புதிய தொழில்களில் முதலீடு செய்வீர்கள்.
குருவின் ஐந்தாம் பார்வை, ராசியின் பனிரண்டாம் இடத்தில் விழுவதால், தடைபட்ட வெளியூர் மற்றும் வெளியூர் பயணங்கள் மீண்டும் தொடங்கும். கடமைக்கு உணவு அருந்தியவர்கள், இனி ருசியான உணவை அருந்த வாய்ப்பு கிடைக்கும்.
மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினர்கள் நலம் பெற்று வீடு திரும்புவார்கள், வெளிநாட்டில் இருப்பவர்களும் தடையின்றி வீடு திரும்புவார்கள்.
குருவின் ஏழாம் பார்வை ராசிக்கு இரண்டாம் இடத்திற்கு கிடைப்பதால், இதுவரை ஏற்பட்ட வருமானத்தடை முடிவுக்கு வரும். குடும்பத்தில் இருந்த இணக்கமற்ற உறவு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். வீட்டிற்கு விலை உயர்ந்த பொருட்கள் வந்து சேரும். பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் வீட்டுக்கு வருவார்கள்.
குருவின் ஒன்பதாம் பார்வை, ராசியின் நான்காம் இடத்திற்கு கிடைப்பதால், வீடு, மனை மற்றும் வாகனங்கள் வாங்கும் முயற்சிகள் கைகூடும். பழைய வீடுகளை புதுப்பித்தல், வாகனங்களை பழுது பார்த்தல் போன்ற பணிகளும் தடையின்றி நடைபெறும்.
வக்கிர குருவை போல, வக்கிர சனியின் பலன்களை அறிந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகும்.
அதன்படி, கடக ராசிக்கு ஏழாம் இடமான மகரத்தில் இருந்து, எதையும் செய்ய முடியாமலும், ஒதுங்க முடியாமலும் செய்த கண்ட சனி, தற்போது வக்கிரம் அடைந்துள்ளதால், அந்த தடைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்.
சளி மற்றும் சுவாச கோளாறுகளால் அவதிப்பட்டவர்கள், அதில் இருந்து விடுபடுவார்கள். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்டுள்ள இணக்கமற்ற உறவு இனி மாறும். நண்பர்கள் மற்றும் தொழில் பங்குதாரர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும்.
பொது வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி கொஞ்சம் கொஞ்சமாக மாறும். மற்றவர்கள் அக்கறையாக நடந்து கொள்வார்கள், உங்களை மதிக்க தொடங்குவார்கள்.
சனியின் மூன்றாம் பார்வை, ஒன்பதாம் இடத்தில் விழுவதால், தந்தையுடன் ஏற்பட்ட முரண்பட்டு முடிவுக்கு வரும். தந்தை மகன் உறவில் புதிய முன்னேற்றம் ஏற்படும்.
தந்தையின் தொழில் மற்றும் வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் முடிவுக்கு வரும். பாதிக்கப்பட்ட தந்தை வழி உறவுகள், இனி மேம்படும்.
தடைபட்ட ஆன்மீக பயணங்கள் மற்றும் ஆலய தரிசனம் மீண்டும் தொடங்கும்.
சனியின் ஏழாம் பார்வை ராசியின் மீது விழுவதால், உடல் மற்றும் மனதில் ஏற்பட்டிருந்த அவ நம்பிக்கை மாறி, புத்துணர்ச்சி பிறக்கும். புதிய முயற்சிகளை முழு மனதுடன் தொடங்குவீர்கள்.
சனியின் பத்தாம் பார்வை நான்காம் இடத்தில் விழுவதால், நோயால் பதிக்கப்பட்ட தாயார் குணமடைவார். வீட்டிற்கு புதிய பொருட்கள் வந்து சேரும். சிலருக்கு புதிய வாகன சேர்க்கையும் ஏற்படும்.
ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் இருக்கும் ராகு, பல்வேறு தடைகளையும் விலக்கி, அவ்வப்போது சில அதிர்ஷ்ட வாய்ப்புகளை தந்துகொண்டே இருப்பார். அதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
எனினும், ஐந்தாம் இடத்தில் இருக்கும் கேது அவ்வப்போது, அவ நம்பிக்கையை மற்றும் விரக்தியை ஏற்படுத்தும். முக்கிய விஷயங்கள் பலவும் மறந்து போகும். படித்த விஷயங்கள் நினைவுக்கு வராமல் போகும். அதனால், அவ்வப்போது விநாயகரை வழிபடுவது நல்லது.
இதுவரை, கோச்சார குரு மற்றும் சனியால் பாதிப்புகளை சந்தித்து இருந்தால், அது வக்கிர குரு மற்றும் வக்கிர சனியால், முடிவுக்கு வரும். அதனால், கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
பொதுவாக, ஒருவரது ஜென்ம ஜாதகத்தில் வக்கிரமாக இருக்கும் கிரகம், கோச்சாரத்தில் வக்ரம் ஆகும்போது, அந்த ஜாதகருக்கு, நல்ல பலன்களை தரும் என்பது ஜோதிட விதியாகும்.
ஜென்ம ஜாதகத்தில் வக்கிரம் அடையாத கிரகங்கள், கோச்சாரத்தில் வக்கிரம் அடையும்போது, பெரிய அளவில், நல்ல பலன்களை தருவதில்லை.
எனவே, வக்கிர குரு மற்றும் வக்கிர சனியின் பலன்கள் அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தை பொறுத்து மாறுபடும்.
மற்ற ராசிகள்:
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 மேஷம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 ரிஷபம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 மிதுனம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 சிம்மம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 கன்னி
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 துலாம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 விருச்சிகம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 தனுசு
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 மகரம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 கும்பம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள் – 2021 மீனம்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வக்கிர குரு மற்றும் வக்கிர சனியின் முழு பலன்களை காண கீழுள்ள வீடியோ பதிவை கிளிக் செய்து பார்க்கவும்.
https://www.youtube.com/watch?v=ZdJlicZmZn4