Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சசிகலா தொடர்பாக பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் பரபரப்பில் சசிகலா தரப்பு

சசிகலா தொடர்ச்சியாக உரையாற்றி வரும் சூழலில் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் சசிகலாவிடம் உரையாற்றினால் இனி கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் ஏற்கனவே உரையாற்றி இருக்கின்ற பலரின் ஆடியோவும் உறுதிசெய்யப்படும் ஆனால் அவர்களும் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள். அதிமுகவிற்கு மக்களிடையே இருக்கின்ற செல்வாக்கை அழிப்பதற்காக சசிகலா முயற்சி செய்து வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் மதுரையைச் சேர்ந்த குபேந்திரன் என்ற அதிமுகவைச் சேர்ந்த ஒருவரிடம் சசிகலா நேற்று உரையாற்றி இருக்கிறார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது கட்சிக்காரர்கள் அனைவரும் மிகவும் வருத்தத்தில் இருக்கிறீர்கள். தொண்டர்கள் எல்லோரும் என்னுடன் இருந்தால் கட்சி அழிய விடமாட்டேன் விரைவில் தொண்டர்களை நேரில் சந்திக்கிறேன் என்று தெரிவித்திருக்கின்றார்.

இந்த சூழலில் சசிகலா பேசிய ஆடியோ தொடர்பாக கோவில்பட்டி சட்டசபைத் தொகுதியில் அதிமுக சட்ட சபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது, சசிகலா ஆடியோ வெளியானது குறித்து சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் தெளிவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்த தீர்மானத்தை வலியுறுத்தி நாளை அதாவது இன்றைய தினம் அதிமுக மாவட்ட கழகத்தின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிமுக தலைமைக்கு அனுப்பப்பட இருக்கிறது என்று தெரிவித்திருக்கின்றார். இதில் இடம்பெறக்கூடிய அம்சங்களை அதிமுக தலைமை இன்னும் சுற்றறிக்கை மூலமாக அனுப்பவில்லை. அதோடு அதிமுக மீது யாராலும் எந்த சாதியையும் பூசி விட இயலாது அதை மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள் என்று தெரிவித்திருக்கின்றார்

Exit mobile version