Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காதல் பட நடிகர் பரிதாப மரணம்! படுமோசமான கோலத்தில் உயிரிழந்த சோகம்!

Kadhal

Kadhal

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடிப்பில் 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் காதல். உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதாக வெளியான இந்த திரைப்படம் பரத், சந்தியா இருவருக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் கிடைத்த ஹிட்டால் தான் சந்தியா காதல் சந்தியா என ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

காதல் திரைப்படம் அடுத்ததாக திருப்புமுனை கொடுத்தது அந்த படத்தில் நடித்த யோகிபாபுவிற்கு, ஒரே ஒரு சீனில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த யோகிபாபு தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார். இப்படி பலருக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்த காதல் திரைப்படம் ஒருவருக்கு மட்டும் புகழை கொடுத்துதோ, தவிர வாய்ப்புகளை கொடுக்காமல் விட்டுவிட்டது.

Kadhal

இந்த படத்தில் யோகிபாபு அறிமுகமாகும் அதே கதாபாத்திரத்தில் ஒல்லியான தேகம், கூலிங் கிளாஸ் என பழைய வடிவேலுவை நியாபகப்படுத்தும் வகையில் பாபு என்ற என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் விருச்சககாந்த். சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த பாபு, 2017ம் ஆண்டு தன்னுடைய தாய், தந்தையை அடுத்தடுத்து இழந்ததாக மன உளைச்சல் பாதிக்கப்பட்டு, தெருவில் அலையும் நிலைக்கு ஆளானார். அந்த வீடியோ வைரலானதை அடுத்து நடிகர் அபி சரவணன் அவரை கண்டுபிடித்து, மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுத்தார்.

Kadhal

லாக்டவுன் நேரத்தில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட காதல் பாபு. நேற்றிரவு ஒரு ஆட்டோவில் உறங்கியுள்ளார். இன்று காலை பார்த்த போது ஆட்டோவில் உறங்கிய நிலையிலேயே அவருடைய உயிர் பிரிந்தது. காதல் பாபு மரணத்திற்கான காரணம் என்னவென தெரியவில்லை. சினிமா வாய்ப்புகள் இல்லாமல், தாய் தந்தையை இழந்து பரிதாபமாக உயிரிழந்த விருச்சககாந்திற்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version