Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சந்தானத்தை இயக்குகிறாரா நடிகர் காதல் சுகுமார்… முகநூலில் வெளியிட்ட பதிவு!

சந்தானத்தை இயக்குகிறாரா நடிகர் காதல் சுகுமார்… முகநூலில் வெளியிட்ட பதிவு!

நகைச்சுவை நடிகராக அறிமுகம் ஆன சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் இப்போது மற்ற நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடிப்பதில்லை. இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சபாபதி, டிக்கிலோனா உள்ளிட்ட சில படங்கள் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய நீண்டநாள் நண்பரும், நடிகருமான காதல் சுகுமாரிடம் ஒரு கதை கேட்டு அதில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக காதல் சுகுமார் தன்னுடைய முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு வைரல் ஆகியுள்ளது.

இது பற்றிய காதல் சுகுமாரின் முகநூல் பதிவு:-

“பார்க்கணும்டா மச்சான்”

என்றதுமே “வா மச்சீ” சந்தானத்தின் உற்சாகக் குரல்.

பார்த்ததும் பழைய காதலியை சந்தித்ததைப் போல ஓர் உணர்வு..

ஷாட்டுக்கு ரெடியாக இருந்தவன் எனைப் பார்த்ததும் சந்தானம்… “வா மச்சான்

“நீ எப்டிடா அப்டியே இருக்க?”

“நீயும்தான்”.

எண்ணம்தானே மச்சான்.எல்லாம்…!!

காதல் அழிவதில்லை, வல்லவன் என பழைய கதைகளை சொல்லி சிரித்து விட்டு.. “என்ன மச்சான் எதாவது…

“உதவிலாம் எதும் கேட்டு வரலடா. ஒரு சக கலைஞனா நண்பனா எனக்கொரு படம் பண்ணிக் குடுக்கணும்”.

“லைன் இருக்கா?”

“ஸ்கிரிப்டே ரெடி .!

“ஒருநாள் சொல்றேன் ஃப்ரீயா இருக்கப்போ வா..!!”

என்றான்..(ஷாட் ரெடி)

“சரி கிளம்புறேன் மச்சி மகிழ்ச்சி” என்றதும் என்ன நினைத்தானோ

“சரி லைன் சொல்லு” என்றவன்… நின்ற நிலையிலேயே 10 நிமிடம் நான் சொன்னதை ரசித்து கட்டியணைத்துக் கொண்டு..

” சூப்பர்டா ..நீ ஜீனியஸ்.. எனக்கு அப்பவே தெரியும் .. விரைவில் அழைக்கிறேன்” என்றான்.

கொட்டாச்சி, கூல்சுரேஷ், எனபழைய நண்பர்களை நினைவு படுத்தி நாமெல்லாம் மறுபடி ஒரு படத்துல சேர்ந்து நடிக்கணும் மச்சி என்றான்.

நிச்சயம் செய்வான்.. வளரும்போதே தன் படங்களில் உடன் பயணித்த நண்பர்களை நடிக்க வைத்தவன்.!!!

#மகிழ்ச்சி_மச்சி.

Exit mobile version