Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிவகார்த்திகேயன் உள்பட 42 நபர்களுக்கு கலைமாமணி விருது! வெளியானது அறிவிப்பு!

தமிழக அரசின் சார்பாக திரைத்துறை உள்பட பல துறைகளில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகின்றது அதன்படி தற்சமயம் திரைத்துறையில் சிவகார்த்திகேயன், சரோஜாதேவி, ராமராஜன், சவுகார்ஜானகி உள்பட சுமார் 42 நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல நடிகைகள் சரோஜாதேவி, சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி போன்றோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதுபோல இசையமைப்பாளர்கள் டி இமான் , தீனா ஆகியோருக்கும் பாடகர்கள் சுஜாதா அவர்களுக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு தயாரிப்பாளர்களில் கலைபுலி எஸ் தாணு, ஐசரி கணேஷ் போன்றோரும் கலைமாமணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குனர் கௌதம் மேனன், லியாகத் அலி கான், மனோஜ் குமார், ரவிமரியா நடிகர்கள் நந்தகுமார், நடிகைகள் சாந்தி வில்லியம்ஸ், நித்தியா ஸ்டன்ட் கலைஞர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ் நடன இயக்குனர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், எடிட்டர் ஆண்டனி, மெல்லிசை கோமகன் பாடலாசிரியர்கள் காமெடியன் காதல் மதி, வசனகர்த்தா பிரபாகர் ஒளிப்பதிவாளர் ரகுனாத ரெட்டி ஆகியோருக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version