Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திடீரென மயங்கி சரிந்த கலாஷேத்ராவின் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன்

Kalashetra director Revathi Ramachandran suddenly fainted

#image_title

திடீரென மயங்கி சரிந்த கலாஷேத்ராவின் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன்

கலாஷேத்ரா அறக்கட்டளையின் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் அலுவலகத்தை விட்டு காரில் செல்ல முயன்ற போது மாணவிகள் அவரை சூழ்ந்து கொண்டு எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் அளிக்க கோரி முற்றுகையிட்டனர்

இதைத் தொடர்ந்து ரேவதி ராமச்சந்திரன் நடந்து சென்றார். அதனைத்தொடர்ந்து மாணவிகள் இயக்குனரை பின் தொடர்ந்து சென்றனர்

சிறிது நேரத்தில் இயக்குனர் மயங்கி சரிந்ததால் உடனடியாக அருகில் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் உள்ள புகழ்பெற்ற கலாஷேத்ராவில் பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார்கள் அளிக்கப்பட்டது. ஆனால் கலாஷேத்ரா நிர்வாகம் இத்தகைய புகார்களை திட்டவட்டமாக மறுத்தது.

இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் (டிஜிபி) சி சைலேந்திர பாபுவைச் சந்தித்த கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன், தங்களது நிறுவனத்தில் ஆசிரியருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து தங்களது “விளக்கத்தை” சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version