மூல நோயை குணமாக்கும் பிரண்டை கலி!! நாம் மறந்து போன பாரம்பரிய மருத்துவம் இது!!

0
56
piles treatment in tamil

நாள்பட்ட மலச்சிக்கல் மூல நோயாக மாறி கடுமையான வலி மற்றும் பாதிப்பை உண்டாக்குகிறது.மூல நோய் வந்தால் மலம் கழிக்கும் பொழுது இரத்தம் வெளியேறும்.சில நேரம் அதிக வலி மற்றும் எரிச்சலை சந்திக்க நேரிடுகிறது.இந்த மூல நோய்க்கு சிறந்த நிவாரணமாக பிரண்டை களி திகழ்கிறது.

 

பிரண்டை,கோதுமை மாவு,கருப்பு எள்,கருப்பு உளுந்து போன்ற பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் பிரண்டை களி மூல நோய்க்கு சிறந்த மருந்தாக திகழ்கிறது.

 

தேவையான பொருட்கள்:

 

1)பிரண்டை தண்டு – ஒரு கப்

2)கோதுமை – ஒன்றரை கப்

3)புளித்த மோர் – ஒரு கப்

4)கருப்பு எள் – 10 கிராம்

5)கருப்பு உளுந்து – 25 கிராம்

 

செய்முறை விளக்கம்:

 

முதலில் ஒரு கப் பிரண்டையை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் புளித்த தயிர் ஊற்றிக் கொள்ளவும்.

 

பின்னர் நறுக்கி வைத்துள்ள பிரண்டை துண்டுகளை அதில் போட்டு இரண்டு நாட்களுக்கு நன்கு ஊறவிடவும்.

 

பின்னர் இதை வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.அதன் பிறகு வாணலியை அடுப்பில் வைத்து 10 கிராம் கருப்பு எள் சேர்த்து கருகிடாமல் வறுக்கவும்.இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

 

அடுத்து அதில் 25 கிராம் கருப்பு உளுந்து சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.பிறகு ஒன்றரை கப் கோதுமையை வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

 

இவற்றை நன்கு ஆறவிட்டு மிக்சர் ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.பின்னர் வெயிலில் காய வைத்த பிரண்டையை அதில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

 

அடுத்து அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு அரைத்த பிரண்டை மாவை அதில் கொட்டி நன்கு கிண்டவும்.பிரண்டை மாவு அடிபிடிக்காமல் கிண்டி எடுக்க வேண்டும்.களி பதத்திற்கு கிண்டிய பிறகு உருண்டையாக பிடித்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.