நடிகர் பிரபாஸின் கல்கி பட டிரைலர் வெளியீடு
முன்னணி நடிகர் பிரபாஸ் நடித்துள்ள கல்கி படத்தின் டிரைலர் வெளியீடு
நடிகர் பிரபாஸ் நடித்துள்ள கல்கி படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் பிரபாஸ் நடித்து வெற்றி அடைந்த சலார் படத்தை தொடர்ந்து இம்மாதம் 27ஆம் தேதி கல்கி திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆவர்.
இப்படத்தின் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்றது.
மேலும் கல்கி படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் இன்று ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இது அறிவியல் மற்றும் எதிர்காலத்தில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் வில்லனாக கமல்ஹாசன் இடம்பெற்றுள்ளார். இதுவரை போஸ்டர்கள் எதும் வெளியாகாத நிலையில் இறுதியில் சில வினாடிகளில் மட்டும் கமல் இடம் பிடித்துள்ளார்.