Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கள்ளக்குறிச்சி செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக கட்டிடங்கள் அடிக்கல் நாட்டு விழா முதல்வர் தொடங்கி வைத்தார் !!

இன்று கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு ,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டியுள்ளார்.

இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், வீரசோழபுரம் பகுதியில் கட்டப்படவுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலகத்திற்கு பொருந்திட்ட வளாகத்திற்கும், செங்கல்பட்டு மாவட்டம், வேண்பாக்கத்தில் கட்டப்படவுள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கும் காணொலிக் காட்சி மூலமாக இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதினால் நிர்வாக வசதி காரணமாக விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டத்தை தோற்றுவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த அறிவிப்பிற்கு ஒப்புக்கொண்டு கடந்த 12. 11.2019 – அன்று கள்ளக்குறிச்சியை புதிய மாவட்டமாக தோற்றுவிக்கப்பட்ட புதிய அரசாணை வெளியிடப்பட்டது.இதனால் தமிழ்நாட்டின் 34-வது மாவட்டமாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தை 26.11.2019 நடைபெற்ற விழாவின்போது தமிழக முதல்வர் தெரிவித்தார்.

இதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வீரசோழபுரத்தில் சுமார் 104 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 26,481 சதுர மீட்டர் பரப்பளவில் தரை மற்றும் எட்டு தளங்கள் கொண்ட கட்டிடமாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம் கட்டப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து கடந்த 18.7.2019 – அன்று நடைபெற்ற சட்டப்பேரவையின் விதி எண் 110 ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரித்து செங்கல்பட்டு மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில், அறிவிப்பிற்கிணங்க 12.11.2019 அன்று செங்கல்பட்டு புதிய மாவட்டமாக அரசாணை வெளியிடப்பட்டது.

இது தமிழ்நாட்டின் 37-வது மாவட்டமாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தை கடந்த 29.11.2019 அன்று நடைபெற்ற விழாவின் போது தமிழக முதல்வர் அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வேண்பாக்கத்தில் சுமார் 119 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் 27 ஆயிரத்து 62 சதுர மீட்டர் பரப்பளவில் தரை மற்றும் அன்பு தளங்களுடன் கட்டப்பட உள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புரிந்திட வளாகத்திற்கு தமிழக முதல்வர் இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

மேலும் இப்புதிய வளாகத்தில் வருவாய்த் துறை பொதுப்பணித் துறை ஊரக வளர்ச்சித் துறை கூட்டுறவுத்துறை உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஓர் பாதுகாப்புத் துறை சமூக நலத்துறை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மிக பிற்படுத்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மாவட்ட வேளாண்மை அலுவலகம் கருவூல அலுவலகம் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகம் ஆதார் சேவை மையம் எஸ்கார்ட் அலுவலகம் கடவுச்சீட்டு அலுவலகம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் அலுவலகக் கட்டடங்களில் இடம்பெறும் என அறிவித்துள்ளர்.

இந்த நிகழ்ச்சியில் நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலை துறை அமைச்சர் சி வி சண்முகம் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பா. பெஞ்சமின் தலைமை செயலாளர் சண்முகம் வருவாய் மற்றும் பேரிடர் நேர்மறை துறை செயலாளர் வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Exit mobile version