கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் அவருடைய சொந்த ஊரான வேப்பூர் அருகே இருக்கக்கூடிய பெரியநெசலூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதி கணியமூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி சென்ற வாரம் விடுதியின் 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் அவருடைய மரணத்தில் சந்தேகமிருப்பதாக அவருடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். மாணவியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும் என்று கேட்டு பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் மற்றும் கிராமத்தினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் சென்ற ஞாயிற்றுக்கிழமை வன்முறையில் முடிவடைந்தது.
மனைவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார், மாணவியின் உடலை மறுக்கூறாய்வு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த சூழ்நிலையில், தாங்கள் தெரிவிக்கும் மருத்துவர் பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவர்கள் குழுவில் இடம் பெற வேண்டும் என்ற பெற்றோரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
அதோடு மாணவியின் உடலை எப்போது வாங்கி கொள்வீர்கள் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது இதனை தொடர்ந்து இன்று பெற்றுக் கொள்வதாக மாணவியரின் பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் மாணவியின் உடல் இன்று காலை 7 மணியளவில் அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவசர ஊர்தியில் ஏற்றப்பட்ட மாணவி உடல் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இருக்கின்ற பெரிய நெசலூர் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு அஞ்சலிக்காக குளிர்சாதன பெட்டியில் மாணவியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. மாணவியின் உடலை பார்த்த உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
இதனை அடுத்து மனைவியின் உடல் மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றார்கள். அப்போது கொலைகாரனை நீதிமன்றம் தண்டிக்க வேண்டும், அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும், அப்படி இல்லை என்றால் என்னுடைய மகளே அவனை அழிப்பார் என்று மாணவியின் தந்தை கூறியபடியே வந்தார்.
மாணவியின் சடலத்துடன் அவருக்கு பிடித்த உயிரியல் பாடப் புத்தகமும் சேர்த்து வைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து மயானத்திற்கு கொண்டுவரப்பட்ட மாணவி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் மாவட்ட அமைச்சரான சிபி கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் பங்கேற்றார்கள்.