கள்ளக்குறிச்சி: மாணவியின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து! முழு விவரம்

0
137

கள்ளக்குறிச்சி: மாணவியின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து! முழு விவரம்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சார்ந்தவர் ராமலிங்கத்தின் மகள் ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் இருக்கின்ற சக்தி தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 13ஆம் தேதி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார் பள்ளியின் நிர்வாக தரப்பில் ஸ்ரீமதி 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரின் மரணத்தில் இருப்பதாகக் கூறி பெற்றோர் உடலை வாங்க மறுத்தனர்.

இதையடுத்து சில நாட்கள் அமைதியான முறையில் போராட்டம் நடந்ததை அடுத்து கடந்த ஞாயிற்றுக் கிழமை பள்ளியில் பெரிய கலவரமே வெடித்தது. நேற்று போராட்டக்காரர்கள் பள்ளியை சூழ்ந்து அங்குள்ள பேருந்து மற்றும் இதர பொருட்களையும் தீ வைத்து எரித்தனர். அவ்வாறு தீ வைத்து எரித்ததையடுத்து பரவலாக வீடியோக்கள் பரவி இணையத்தில் அதிகம் கவனம் பெற்றன.

இந்நிலையில் இந்த வழக்கு இப்போது சி பி சி ஐ டிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவியின் உடல் மீண்டும் உடல் கூறாய்வு செய்யப்பட்டு பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. இன்று மாலை அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் மாணவியின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் சாலையில் செல்லும் போது சிறு விபத்தில் சிக்கியுள்ளது. ஆம்புலன்ஸ் முன்னால் சென்ற DSP வாகனத்தில் மோதியதில் ஆம்புலன்ஸுக்கும் முன்னாள் சென்ற வாகனத்துக்கும் சிறு சேதாரங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் பின்னர் மாணவியின் உடல் அவரின் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.