Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் விண்வெளி பயணத்தில் கல்பனா சாவ்லா விண்கலம் !!

நாசாவின் கல்பனா சாவ்லா விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்ட இந்த விண்கலமானது, சிக்னல் கார்கோ என்ற  சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 8,000 பவுண்ட் எடை பொருட்களை கொண்டு செல்லும் வகையில் விர்ஜினியாவில் உருவாக்கப்பட்டது.

இந்த விண்கலம் இரண்டு நாள் பயணத்திற்கு பின் திங்கட்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்தில் சென்றடையும் என்று கூறி இருந்தனர் .இதற்கு முன்பு கடந்த வியாழக்கிழமையன்று இந்த விண்கலத்தை விண்ணில் ஏவப்பட்ட திட்டமிட்டிருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இத்திட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

பின்பு  இன்று மீண்டும் தனது விண்வெளி பயணத்தை கல்பனா சாவ்லா விண்கலம் வெற்றிகரமாக தொடர்ந்துள்ளது.

Exit mobile version