கன்னியாகுமரி இடைத்தேர்தல்! காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னிறுத்தப்படும் முக்கிய புள்ளி!

0
193

பாஜக அதிமுக கூட்டணியில் 20 சட்டமன்ற தொகுதி உடன் சேர்த்து ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் பெற்றிருக்கிறது சென்ற 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி அடைந்ததால் இந்த முறையும் அந்த தொகுதியை கேட்டு வாங்கி இருக்கிறது. கன்னியாகுமரி தொகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் ராதாகிருஷ்ணன் தோற்கடித்து வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியை சார்ந்த வசந்தகுமார் உயிரிழந்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியாக இருந்ததால் தற்சமயம் எதிர் வரும் சட்டசபை தேர்தலில் அந்த நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், இந்த தொகுதியில் பாஜக சார்பாகவும் அதிமுக கூட்டணி சார்பாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் களம் அழைக்கப்படுகின்றார். அதேபோல காங்கிரஸ் கட்சியின் சார்பாக மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.அவர் இதற்காக திமுகவிடம் விருப்ப மனுவும் கொடுத்திருக்கின்றார். அதோடு தன்னுடைய தந்தை பாதியில் விட்டுச் சென்ற பணிகள் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றுவேன் என்றும் சூளுரைத்து இருக்கின்றார். நிலவரம் இப்படியிருக்க கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விருப்ப மனுவை கொடுத்திருக்கின்றார்.

வசந்தகுமார் உயிரிழந்த சமயத்திலேயே கன்னியாகுமரியின் அடுத்த இடைத்தேர்தலில் அவருடைய மகன் விஜய் வசந்த் தான் வேட்பாளர் என்று பரவலாக பேசப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் அந்த தொகுதி மக்களிடம் அவருக்கு அநேக வரவேற்பும் இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் கார்த்தி சிதம்பரத்தின் இந்த செயலால் விஜய் வசந்த் அதிருப்தியில் இருப்பதாக சொல்கிறார்கள்.காங்கிரஸ் கட்சியின் சார்பாக பிரியங்கா காந்தி ஒருவேளை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் நிச்சயமாக அவர் வெற்றி பெற மாட்டார் என்பதே அநேக மக்களின் கருத்தாக இருந்து வருகிறது. பிரியங்கா காந்தி என்னதான் ராஜீவ் காந்தியின் மகள் என்று அறியப்பட்டாலும் அவருக்கு பெரிய அளவில் தமிழகத்தில் செல்வாக்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே அவர் வெற்றி பெறுவது கடினம் என்று சொல்கிறார்கள்.

இருந்தாலும் தமிழகத்தில் தனக்கு பெரிய அளவில் செல்வாக்கு இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் மேலிடம் அந்த கவுரவத்தை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. அதன் காரணமாகவே முதலில் விஜய் வசந்த்தை நிறுத்த முடிவு செய்துவிட்டு தற்சமயம் பிரியங்கா காந்தியை முன்னிறுத்துகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் சார்பாக களமிறங்கினால் நிச்சயமாக கன்னியாகுமரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவது கடினம். ஆனால் அதே வேளையில் பாஜக எளிதாக வெற்றியை தட்டிப் பறித்து விடும் என்று சொல்கிறார்கள். ஏனென்றால் அங்கே பாஜக சார்பாக வேட்பாளராக களமிறக்கப்பட்டு இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அந்த தொகுதியில் செல்வாக்கு மிக்கவர் என்று சொல்லப்படுகிறது.