கோடி கடனும் காணமல் போகச் செய்யும் காமாட்சி விளக்கு வழிபாடு!!
இன்றிய கால வாழ்க்கை சூழலில் ஒவ்வொரு நாளையும் நகர்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. எதற்கும் பணத்தின் தேவை அதிகரித்து விட்டது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் நாம் ஈட்டும் வருமானம் போதுமானதாக இல்லை. இதனால் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். ஒருமுறை கடன் வாங்கி பழகிக் கொண்டால் அந்த பழக்கம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். இதனால் வாங்கிய கடனை கட்ட முடியாமல், மீண்டும் கடனில் சிக்கி விடுகிறோம். இந்த கடன் பிரச்சனை சரியாக வீட்டில் காமாட்சி விளக்கு வழிபாடு செய்வது நல்லது.
வாரத்தில் ஒருமுறை இந்த விளக்கு வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். இந்த காமாட்சி விளக்கு ஏற்ற ஒரு சிறிய தட்டு இரண்டு மண் அகல்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த விளக்கை பூஜை அறையில் ஏற்றலாம். பூஜை அறை இல்லாதவர்கள் வரவேற்பு அறையில் வைத்து வழிபாடு செய்யலாம்.
முதலில் காமாட்சி அம்மன் விளக்கை நன்றாக தேய்த்து சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து பூ வைத்து அலங்காரம் செய்து கொள்ளவும். அடுத்து ஒரு தட்டில் காமாட்சி அம்மன் விளக்கை வைத்து நெய் ஊற்றி வெள்ளெருக்கு திரி அல்லது தாமரைத் தண்டு போட்டு விளக்கு ஏற்றவும்.
அடுத்து காமாட்சி அம்மன் விளக்கிற்கு பக்கத்தில் 2 சிறிய தட்டு வைத்து அதில் மண் அகல் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றவும். இந்த விளக்கு கிழக்கு பார்த்து ஏரிய வேண்டும்.
பின்னர் “ஓம் மங்களம் தருவாய் காமாட்சி தேவியே” என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி உங்கள் கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும். இந்த வழிபாட்டை 21 வாரங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் உங்கள் கடன் முழுவதும் விரைவில் அடைந்து விடும்.