கமலும் விஜயும் ஒரே திரைபடத்தில்!! எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்!!

0
218
Kamal and Vijay in the same film

Vijay and Kamalhaasan:விஜய் மற்றும் கமல்ஹாசன் அட்லி இயக்கம் புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கல்கள் வெளியாகியுள்ளது.

தளபதி விஜயின் ‘தி கோட்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகபெரிய வரவேற்ப்பை பெற்று வசூலை அள்ளி குவித்தது. இந்த திரைப்படத்தினை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இதனை தொடர்ந்து விஜய்யின் அடுத்த படமான தளபதி 69 திரைப்படத்தை யார் இயக்கப் போவது என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே  இருந்தது.

கடந்த மாதம் தளபதி 69 திரைப்படத்தினை H வினோத் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி அதற்கான பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது.  இந்த திரைப்படத்தில் பாபி டியோல், பூஜா ஹெக்டே, மம்தா பைஜூ மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் அட்லி சல்மான் கான் மற்றும் கமல்ஹாசனை வைத்து திரைப்படத்தினை இயக்கவுள்ளார். அட்லி இதற்கு முன் விஜய்யை வைத்து 3 மிகப்பெரிய வெற்றி படங்களை இயக்கியுள்ளார். விஜய் தற்போது கட்சி தொடங்கி அரசியலில் முழுவதாக கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது நடித்து கொண்டுள்ள தளபதி 69 திரைப்படம் தனது கடைசி படம் என்று கூறியிருந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் சல்மான் கான் நடிக்கும் திரை படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. இது வதந்தியாக இருக்குமா? இல்லை உண்மையாக இருக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.