கமலுக்கும் விஜய்சேதுபதிக்கும் செட்டே ஆகறது இல்ல!! விக்ரம் படத்தில் இருந்து விலகிய விஜய்சேதுபதி!!

0
119
Kamal and Vijay Sethupathi are not set !! Vijay Sethupathi withdraws from Vikram movie

கமலுக்கும் விஜய்சேதுபதிக்கும் செட்டே ஆகறது இல்ல!! விக்ரம் படத்தில் இருந்து விலகிய விஜய்சேதுபதி!!

தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர் போற படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்  லோகேஷ் கனகராஜ். இவரின் இயக்கத்தில் தற்போது உலகநாயகன் கமல், விக்ரம் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் முதலில் ராகவா லாரன்ஸ் மாஸ்டர்  தான் நடிகர் கமலுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. பின்னர்  ராகவா லாரன்ஸ் மாஸ்டர்  சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார்.

மேலும் மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் ஃபாசில் விக்ரம் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பகத் ஃபாசில் மட்டுமில்லாமல்,  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடிகர்  விஜய்சேதுபதி கலக்கியிருப்பார். மேலும் இந்தியன் 2 படத்தில் கமல் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை வேண்டாம் என மறுத்து விட்டார் நடிகர் விஜய்சேதுபதி.

இந்த நிலையில் தற்போது கமல் நடிக்க உள்ள விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கமலுடன் சேர்ந்தது நடிகர் விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்  இனையத்தளத்தில் வைரளாகி வந்தது. இந்த நிலையில், நடிகர் விஜய்சேதுபதிக்கு இந்த படத்திற்காக பேசப்பட்ட சம்பளம் ஏற்றுக்கொள்ள கூடியதாக  இல்லாத காரணத்திற்காக நடிகர் விஜய்சேதுபதி விக்ரம் படத்தில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.