Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்த கமல் பட நடிகர்!

ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்த கமல் பட நடிகர்!

 

தமிழில் ஒரு சில படங்களில் துணை நடிகராக பணியாற்றிய மோகன் ஆதரவற்ற நிலையில் கடந்த ஜூலை 31 அன்று திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியின் சாலையில் இறந்து கிடந்தார்.

 

 

கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ சகோதரர்கள், நான் கடவுள்,அதிசய மனிதர்கள் உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்திருக்கிறார் மோகன்.சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த சின்னு என்பவரின் இளைய மகனான மோகனுக்கு சகோதரர்,சகோதரிகள் என்று மொத்தம் 6 பேர் உள்ளனர்.மேலும் மோகன் சினிமாவில் நடிப்பதற்கு முன் சர்க்கஸ் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.பிறகு கமலுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்நிலையில் தமிழில் ஓரிரு படங்களில் மட்டும் நடித்த மோகன் பட வாய்ப்பு கிடைக்காததால் வறுமைக்கு தள்ளப்பட்டார்.இந்நிலையில் பிழைப்பு தேடி மீண்டும் சொந்த ஊருக்கு சென்ற மோகனை குடும்ப உறுப்பினர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை.இதனால் அவ்வூரை விட்டு மதுரை திருப்பரங்குன்றம் அருகே ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.இந்நிலையில் வறுமை அவரை வாட்டி வதைக்க யாசகம் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டு அப்பகுதி மக்கள் கொடுக்கின்ற உணவை உண்டு வந்துள்ளார்.மேலும் உடல் ரீதியாக பல நோய்களால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த ஜூலை 31 அன்று திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்தார்.

 

இதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த திருப்பரங்குன்றம் போலீசார் மோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.பிறகு இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மோகனின் உடலை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

 

இந்நிலையில் மோகன் ஆதரவற்று இறந்து கிடந்த செய்தி திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version