அடுத்தடுத்து வெளியேறும் முக்கிய தலைவர்களால் காலியாகும் மநீம.. அதிர்ச்சியில் கமல்ஹாசன்.!
நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் சாதித்த நிலையில் அரசியல் சாதிக்கப்போவதாக கூறி மாற்று அரசியல் என்ற முழக்கத்தோடு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். கமல்ஹசனால் மாற்றம் வரும் என்று நம்பிய பலரும் அவரது கட்சியில் இணைந்து ஆதரவளித்து வந்தனர்.
ஆனால், நாளடைவில் கமல்ஹாசனும் சராசரி அரசியல்வாதியை போலவே மாறியதால் அவரின் கொள்கைகள் பிடிக்காமல் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பலரும் வெளியேறினார்கள். குறிப்பாக இந்த கட்சியில் ஜனநாயகம் இல்லை உள் அரசியல் நடக்கிறது என்று கூறி பத்மப்பிரியா, மகேந்திரன் அனுஷா ரவி ஆகியோர் வெளியேறினார்கள்.
அவர்களை தொடர்ந்து தேர்தல் முடிந்த மறுநாளே மக்கள் நீதி மய்யம் மாணவர் அணி தலைவராக இருந்த சங்கர் ரவி இந்த கட்சியில் இருந்து பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அதற்கு அவர் இந்த கட்சியில் ஜனநாயகம் இல்லை. கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை. எதிர்காலத்திலாவது இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று காரணம் ஒன்றையும் கூறி இருந்தார்.
இந்நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மேலும் சில முக்கிய தலைவர்கள் வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக பிரபல நடிகரின் மனைவியும், கட்சி தலைமைக்கு இணையாக இருக்கும் நடிகை ஆகிய இருவரும் இந்த கட்சியில் இருந்து வெளியேறி வேறு ஒரு தேசிய கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்ல இவர்களுக்காக மாநில தலைமை டெல்லி தலைமையிடம் பேசி கிட்டத்தட்ட அனைத்தையுமே தயார் செய்து விட்டதாகவும் கூறுகிறார்கள். இப்படி தொடர்ந்து கட்சியில் இருந்து அடுத்தடுத்த நிர்வாகிகள் வெளியேறி வருவதால், கமல்ஹாசன் செய்வதறியாமல் முழித்து வருகிறாராம்.