2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மையம் என்னும் கட்சியை துவங்கி அரசியலில் நுழைந்த நடிகர் கமலஹாசன் அவர்கள் நேற்றோடு அதாவது பிப்ரவரி 21ஆம் தேதி மக்கள் நீதி மையத்தின் எட்டாவது வருடம் நிறைவு விழாவை முடித்து பேட்டி அளித்த அவர் மும்மொழி கொள்கை குறித்தும் மறைமுகமாக சில சாடல்களையும் பேசி இருப்பது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் அவர்களால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது :-
தன்னை தோல்வியடைந்த அரசியல்வாதியாக கூறக்கூடியவர்களுக்கு, தான் கூறக்கூடிய பதில் என கமலஹாசன் அவர்கள், 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் அரசியலுக்கு வந்திருந்தால் நான் இப்பொழுது இருக்கக்கூடிய சூழலும் உயரமும் வேறு என தெரிவித்தார். மேலும் தன்னுடைய 8 ஆண்டுகள் அரசியல் பயணத்தில் பல விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் நடிகரிலிருந்து அரசியல்வாதியாக பலர் மாறி உள்ளதாகவும் தெரிவித்தவர், ரசிகர்கள் வேறு வாக்காளர்கள் வேறு என்பதை உணர்ந்து கொண்டதாகவும் இதை தான் தன்னுடைய அனுபவத்திலிருந்து கூறுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் மும்மொழி கொள்கை குறித்து பேசி அவர், தமிழ் மொழிக்காக உயிரை கொடுத்த மக்கள் இவர்கள் என்றும் தங்களுக்கு என்ன மொழி தேவை என்பதை தாங்களே முடிவு செய்யும் அளவிற்கு இவர்களுக்கான திராணி உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்.