Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய கமல்ஹாசன்! கூட்டணியில் இணைவதற்கான சிக்னல்?

சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை பரபரப்பாக நடந்து வருகின்றது. இந்த சூழ்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய 69வது பிறந்த நாள் விழாவை இன்று கொண்டாடி வருகின்றார். இதற்காக அவர் இன்று காலை அண்ணா நினைவிடம் மற்றும் கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தி இருக்கின்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் பிறந்தநாளுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அரசியல் கட்சி பிரமுகர்கள் ,பிரபலங்கள், போன்றவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய வலைப்பக்கத்தில் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்

திமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் இந்த சமயத்தில் கமல்ஹாசனின் இந்த வாழ்த்துச்செய்தி ஆனது மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக காணப்படுகின்றது. எல்லோரையும் விமர்சனம் செய்யும் கமல்ஹாசன் திமுகவை பெரிதாக விமர்சனம் செய்தது கிடையாது. அதன் காரணமாக. சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான ஒரு சூசக தகவலாக இந்த வாழ்த்துச் செய்தி பார்க்கப்படுகின்றது. அதோடு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் எதிர்பார்ப்பை தற்போதைய திமுகவின் தலைவர் ஸ்டாலின் மிகச் சிறப்பாக நிறைவேற்றி வருகின்றார் என்றும் அவர் அந்த வலைதள பதிவில் தெரிவித்து இருக்கிறார்.
Exit mobile version