கமல்ஹாசன் தயாரிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி கண்டது. அது நூறாவது நாள் வெற்றி கொண்டாட்டத்தை கூட படக்குழு இணைந்து சமீபத்தில் கொண்டாடி இருந்தது. அதில் கமல்ஹாசன் சாய் பல்லவி குறித்து பேசுகையில், மறைமுக சிலரை குத்தி வாதாடி உள்ளார். அதற்கு முன் நடந்த சாய் பல்லவி, கமல்ஹாசன் சந்திப்பில் சாய் பல்லவி தன்னை இன்னுமும் ரசிகர்கள் ரவுடி பேபி என்று ஞாபகம் வைத்து உள்ளார்கள் என்று கூறி வருந்தியதாக கூறியுள்ளார்.
நீங்கள் ரவுடி பேபி மட்டும் கிடையாது. நீங்கள் நடித்த குறிப்பிட்ட படங்கள் ஓடவில்லை என்றாலும் உங்கள் நடிப்பு இன்றளவும் பேசப்பட்டு வருகின்றது. நான் படத்தின் பெயரை வெளிப்படையாக சொல்ல விரும்பவில்லை என்றாலும் உங்கள் நடிப்பு பேசப்பட்டது. சொல்லினால் படத்தை எடுத்தவர் கவலைப்படுவார் என்று பேசியுள்ளார். அவர் குறிப்பாக மாரி 2 என் ஜி கே (NGK) போன்ற படங்களை சுட்டிக்காட்டி உள்ளார் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஜினியின் , ” முள்ளும் மலரும் படத்தில் உள்ள பேமஸ் டயலாக்கான ரெண்டு கை ரெண்டு காலை வெட்டி போட்டாலும் பொழச்சுக்குவான் சார் இந்த காளி. கெட்ட பைய சார் இந்த காளி” என்கிற வீடியோவை பகிர்ந்துள்ளார்.