Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் மூன்று பிரபலங்கள் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் இரவுபகலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும், இந்த படத்தின் நான்கு மொழிகளில் மோஷன் போஸ்டரை இந்தியாவின் நான்கு முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் மோஷன் போஸ்டரை உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும், மலையாள மோஷன் போஸ்டரை மோகன்லால் அவர்களும், ஹிந்தி மோஷன் போஸ்டரை சல்மான்கான் அவர்களும் வெளியிட இருப்பதாக இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தெலுங்கு மோஷன் போஸ்டரை வெளியிடும் நட்சத்திரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் வளர்ந்து வரும் இந்த படம் 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும்

Exit mobile version