Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாளை மறுநாள் பிறந்த நாள்: கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு

நாளை மறுநாள் பிறந்த நாள்: கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் திரையுலகில் கமல்ஹாசன் 60 ஆண்டுகள் பணிபுரிந்ததை அடுத்து நவம்பர் 7 முதல் 9 வரை மூன்று நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் ஒருநாளில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மற்றும் இளையராஜா கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனது பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து சற்றுமுன் கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிக்கை ஒன்றின்மூலம் தனது கட்சியின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாளை மறுநாள்‌ (07/11/2019) எனது பிறந்த நாள்‌ அன்று, பரமக்குடியில்‌ எனது தந்தையார்‌ அய்யா 0.சீனிவாசன்‌ அவர்களின்‌ திருவுருவச்சிலையினைத்‌ திறக்கவுள்ளோம்‌ என்பதை தாங்கள்‌ அனைவரும்‌ அறிவீர்கள்‌.அப்பொழுது என்னை வரவேற்க வருகின்ற நண்பர்கள்‌, தொண்டர்கள்‌ மற்றும்‌ ரசிகப்பெருமக்கள்‌ எவ்விதத்திலும்‌ பொதுமக்களுக்கு. ஊறு விளைவிக்கக்கூடிய வகையில்‌ பேனர்கள்‌, ஃப்ளெக்ஸ்‌ மற்றும்‌ கொடிகள்‌ போன்றவற்றை கட்டாயம்‌ தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்‌.

இவ்விசயத்தில்‌ எவ்வித காரணங்களும்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, எந்நிலையிலும்‌ சமரசங்கள்‌ செய்து கொள்ளப்பட மாட்டாது என்பதை மிகவும்‌ கண்டிப்பாக தெரிவித்துக்கொள்கின்றேன்‌. இனி நிகழவிருக்கும்‌ அரசியல்‌ மற்றும்‌ ஆட்சி முறைகளில்‌, மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சி கொண்டு வரவிருக்கும்‌ மாற்றங்களை நம்மிடமிருந்தே துவங்க வேண்டும்‌ என்பது எனது விருப்பம்‌.

Exit mobile version