Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கமல் வீட்டில் கொரோனா எச்சரிக்கை வாசகம் ஒட்டிய மாநகராட்சி : பதற்றத்தில் ரசிகர்கள்!

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் இதுவரை 24 ஆயிரம் பேரின் உயிர்களை பலி வாங்கியுள்ளது. இந்த நோய் இந்தியாவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தாமல் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதில் முதல் கட்டமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு மக்களை வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளது. மேலும் கொரோனா தொற்று அபாயம் உள்ளவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு வந்தவர்களின் வீடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி ஊழியர்களால் ஸ்டிக்கர் ஒட்டப்படும்.

இந்தநிலையில் நடிகர் கமலஹாசனின் வீட்டு வாசலிலும் ‘கொரோணா எச்சரிக்கை நாங்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளோம்’ என்ற வாசகம் மாநகராட்சியால் ஒட்டப்பட்டது. இந்த தகவல் வேகமாகப் பரவி கமல் ரசிகர்களுக்கு மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விசாரித்தபோது மாநகராட்சி ஊழியர்கள் அருகிலிருந்த வீட்டில் ஒட்டுவதற்கு பதிலாக கமலின் வீட்டில் தவறுதலாக ஒட்டப்பட்டது என்று விளக்கம் அளித்தனர். இந்த தகவலைக் கேட்டு உறுதி செய்த பின்னரே நடிகர் கமலின் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

Exit mobile version