திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்பதில் சிறிய திருத்தம் கிரகங்களுடன் கூட்டணி இல்லை என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கின்றார்.
சட்டமன்ற தேர்தல் சம்பந்தமாக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு கமல்ஹாசன் தன்னுடைய கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்திருக்கின்றார்.
நடிகர் கமல் மக்கள் நீதி மையம் என்ற கட்சியினை ஆரம்பித்து தீவிர அரசியலில் கொதித்து விட்டார்.
2019 ஆம் வருடம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவருடைய கட்சி முதல் முறையாக அரசியல் களத்தில் நின்றது. இப்போது 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை நோக்கமாகக் கொண்டு ,மக்கள் நீதி மையம் பிரச்சாரத்திற்கு தயாராகி வருகின்றது.
தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மக்கள் நீதி மையத்தின் சார்பாக ஒரு தனியார் நிறுவனம் கருத்துக்கணிப்பை நடத்தி இருக்கின்றது.
அந்தக் கருத்துக் கணிப்பில், சென்னையில் அந்த கட்சிக்கு கணிசமான செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகின்றது.
ஆகவே அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த தொகுதியில் தற்போது அதிமுகவை சார்ந்த ஆர். நடராஜ் என்பவர், சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்றார்.
இத்தொகுதியில், திமுக 5 முறையும், பாஜக ஒரு முறையும், அதிமுக 6 முறையும், காங்கிரஸ் கட்சி மூன்று முறையும், வெற்றி பெற்று இருக்கின்றன.
சமுதாய ஓட்டுகளை கருத்தில் வைத்து, கமல்ஹாசன் இத்தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.