பந்தா பரமசிவமான கமல்ஹாசன்!

0
113

ஆகாயம் மூலமாக பிரச்சாரத்திற்கு சென்று வந்த காரணத்தால் ஜெயலலிதாவே கடுமையாக விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டார். ரயில், கார் என்று அந்த வயதில் கூட
தரை வழி பயணமாகவே சென்று வந்த கருணாநிதி போற்றப்பட்டார் .அதன் பிறகு ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்பாக விபரங்கள் தெரிய வந்த நேரத்தில், அவர் ஆகாய மார்க்கமாகப் பயணம் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனாலும் கமல்ஹாசனின் ஆகாய பயணம் தான் இப்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றது.

திருச்சியில் நேற்று தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்து தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், போன்ற மாவட்டங்களில் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகின்றார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன். இதற்காக அவர் கார் மூலம் திருச்சிக்கு போகாமல் சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

திருச்சி விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்காக அந்த கட்சியினர் செண்டை மேளத்துடன் காத்திருந்தார்கள். திட்டமிட்டபடி சுமார் 12 .20 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தில் வந்து இருக்க வேண்டும். விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடந்து கொண்டிருந்த காரணத்தால், தனி விமானம் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆகவே விமானத்தை மதுரைக்கு திருப்பி விட்டார்கள். இந்த நிலையில், அவரை வரவேற்பதற்காக காத்திருந்த அந்த கட்சியின் தொண்டர்கள் நிர்வாகிகள் என அனைவரும் ஏமாந்து போயினர்.

மதுரையிலிருந்து கமலஹாசன் காரில் வருகின்றார் என்று ஒரு தகவல் வெளியானதும் சாலையில் சென்று காத்திருந்தார்கள் தொண்டர்கள். அதன் பிறகு தனி விமானத்தில் வருகின்றார். என்று தெரிய வந்ததும் விமான நிலையத்திற்கு அருகே தனியார் குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிப்பேடில் வந்து இறங்கினார் கமல்ஹாசன். அவருடன் இளைய மகள் அக்ஷரா ஹாசனும் வந்தார்.

இந்த நிலையில், சுமார் 2 மணி நேரம் வரை காத்திருந்த மக்கள் கமல்ஹாசனுக்கு வரவேற்பு கொடுத்தனர். கூட்டத்தினருக்கு வணக்கம் தெரிவித்த கமல்ஹாசன் பிரச்சார வாகனத்தில் ஏறி சொகுசு விடுதிக்கு புறப்பட்டுச் சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்.

கமல்ஹாசன் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியது போல் இருக்கின்றது. என அந்த பகுதி மக்கள் பெருமையாக பேசிக் கொண்டனர். அதே சமயத்தில் மதுரையிலிருந்து திருச்சிக்கு வந்த அவருக்கு மட்டுமே ஹெலிகாப்டர் செலவு 1.5 லட்சம் என்று தெரியவந்ததும் இவ்வாறு ஒரு பிரச்சாரம் எதற்காக என்று முகம் சுளித்து இருக்கிறார்கள் மக்கள்.