Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாழ்த்து மழையில் நனைந்த கமல்! நெகிழ்ச்சி மடல்!

நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.

ஒருபுறம் சினிமா, மறுபுறம் அரசியல், என்று அதிரடியாக களம் இறங்கி இருக்கின்றார் கமலஹாசன். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் அவருடைய 66வது பிறந்தநாளை சென்ற சனிக்கிழனையன்று கொண்டாடினார். இந்நிலையில் அவருக்கு திரையுலகினரும், அரசியல் கட்சித் தலைவர்களும், வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக அவர் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், என் பிறந்தநாளுக்கு தொலைபேசியிலும், நேரிலும், மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும், வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள் நண்பர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர், மற்றும் திரைத்துறை ஆளுமைகள், ஊடகவியலாளர்கள், என அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்திருக்கின்றார்.

என்னுடைய பிறந்தநாளை நற்பணி தினமாக கொண்டாடி இருக்கும், எங்கள் மக்கள் நீதி மையத்தில் சகோதரர்களை என் மனதார தழுவி கொள்கின்றேன். உங்கள் அன்பிற்கு மென்மேலும் தகுதி உடையவனாக என்னை தயார்படுத்திக் கொள்ள உள்ளும், புறமும் சீரமைத்து கொள்வேன், அடுத்த பிறந்த நாளை கோட்டையில் கொண்டாடுவோம் என்று தெரிவித்திருக்கின்றார்.

Exit mobile version