இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு சூப்பர்ஸ்டாரை கழட்டி விட கமல் கொடுத்த யோசனை! அடடா இது நல்ல ஐடியாவா இருக்கே!

0
172

தற்போது திரையுலகில் லோகேஷ் கனகராஜ் என்னும் இயக்குனர் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.  இவர் இயக்கியுள்ள இரண்டு படங்களும் வெற்றி திரைப்படங்களாக திரையுலகில் உலா வந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில்  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் இளையதளபதி   விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. 

மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் கனகராஜ் க்கு பல வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அடுத்தபடியாக நடிகர் கமலஹாசன் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரைப்படம் இயக்க அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.

நிச்சயம் இவர்கள் கூட்டணி ஒரு வெற்றி கூட்டணியாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகப் பெருமக்கள் இடம் பரவியுள்ளது.  ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த திரைப்படத்திற்கு நடிக்க கால்ஷீட் ஒதுக்க முடியாத நிலையில் உள்ளார்.

ஆகையால் நடிகர் கமலஹாசன், லோகேஷ் கனகராஜ் இடம்  கூறியதாவது, ரஜினி நடிக்க கால்ஷீட் ஒதுக்கும் போது இந்த திரைப்படத்தை இயக்கிக் கொள்ளலாம் அதற்கிடையில் நாம் இருவரும் இணைந்து ஒரு புதிய படத்தை இயக்கலாம் என்று அருமையான ஒரு யோசனை கூறியுள்ளார். 

இந்த தகவலை கேட்டதும் லோகேஷ் கனகராஜ் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.  பலரும் இவரிடம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  ஆனால் சில  இயக்குனர்களுக்கு  இவரின் வளர்ச்சியை கண்டு பொறாமையாக உள்ளது.