Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Kanavu Palangal in Tamil : பேய், பிசாசு கனவு வந்தால் என்ன பலன்..!!

#image_title

Kanavu Palangal in Tamil : பேய், பிசாசு கனவு வந்தால் என்ன பலன்..!!

1)உங்கள் கனவில் நீங்களே பேயாக வந்தால் ஏதோ ஒரு பெரிய’தவறை செய்து விட்டு மறைத்து விஷயங்கள் இனி வெளிவந்து மாட்டிக் கொள்ளப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

2)உங்கள் கனவில் பேய், பிசாசுக்களிடம் நீங்கள் மாட்டிக் கொள்வது போன்று கனவு வந்தால் நீங்கள் வாழ்வில் அனுபவித்து வந்த கஷ்டங்கள் தீரும் என்று அர்த்தம்.

3)நீங்கள் படுத்து உறங்கும் அறையில் பேய், பிசாசு இருப்பது போல் கனவு வந்தால் புது நபரின் அறிமுகம் கிடைக்கப்போகிறது என்று அர்த்தம்.

4)உங்கள் கனவில் உங்களுக்கு நெருங்கிய நபர்கள் பேயாக வந்தால் நீங்கள் விரைவில் ஏதோ ஒரு விஷயத்தால் நீங்கள் ஏமாறப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

5)உங்கள் கனவில் பேய், பிசாசுகளிடம் நீங்கள் உரையாடுவது போல் கனவு வந்தால் மிகப்பெரிய பிரச்சனை உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

6)உங்கள் கனவில் உங்களுக்கு நெருங்கிய நண்பர் பேயாக வந்தால் பலரின் கேள்விக்கு ஆளாகும் படியான ஏதோ ஒரு தவறான விஷயத்தை செய்யப்போகிறீர்கள் என்று அர்த்தம்.

7)நீங்கள் ஏதோ ஓர் மர்ம இடத்தில் பேயுடன் இருப்பது போல் கனவு வந்தால் உடல் நலக் கோளாறு ஏற்படப் போகிறது என்று அர்த்தம்.

8)உங்கள் கனவில் பேய் புன்னகைப்பது போன்று கனவு வந்தால் உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வரக் கூடும் என்று அர்த்தம்.

9)பேய் உங்களிடம் கோபம் கொள்வது போன்று கனவு வந்தால் உங்களுக்கு எழப் போகும் பிரச்சனையை முன் கூட்டியே எச்சரிப்பதாக அர்த்தம்.

10)பேய் உங்களை கொள்வது போன்று கனவு வந்தால் உங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக அர்த்தம்.

Exit mobile version