Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லையெனில், உதவித்தொகை!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழ் நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரொனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த காரணத்தினால் பலர் வேலையின்றி தவித்து வரும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், இந்த நிலையில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் மூலமாக ஆண்டு தோறும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு அரசு தரப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து தற்போது பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்ததற்கான கல்வித் தொகை பதிவு செய்தவர்களுக்கு 200 எனவும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு 300 எனவும், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர்களுக்கு 400 எனவும், பட்டம் மற்றும் முதுகலை பட்டம் படித்து பதிவு செய்தவர்களுக்கு 600 என மூன்று ஆண்டுகளில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்ப மையத்தில் பதிவுசெய்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு நிறைவு செய்து இருந்தாலே போதுமானது. இந்த தொகையினை பொறியியல், விவசாயம், மருத்துவம் மற்றும் கால்நடை, சட்டம் போன்ற தொழில் கல்வி முடித்த பட்டதாரிகள் பெற இயலாது.

மேலும், இந்த உதவித் தொகை பெற தகுதியுள்ள நபர்கள் என்ற http://www.tnvelaivaaippu.gov.in/Empower இணையதள முகவரி மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் அல்லது காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பத்தை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

அதனை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் அதனுடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு புத்தகம் நகலையும் இணைக்க வேண்டும் என்று அவர் வெளியிட்டுள்ளார்.

Exit mobile version