Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஏழை எளிய மாணவர்களுக்கு உயர் கல்வியை எட்டாக்கனியாக்கும்! புதிய கல்விக்கொள்கை! திமுக எம்.பி கனிமொழி.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது

இந்த புதிய கல்வி கொள்கையில் 3,5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு.அனைத்து கல்லூரிகளுக்கும் தன்னாட்சி அந்தஸ்து.கல்லூரி மற்றும் பல்கலைகழக மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு.

கல்வியில் “மும்மொழி கொள்கை” அறிமுகம் “சமஸ்கிருதம்” அனைத்து பள்ளி மற்றும் உயர் படிப்புகளில் விருப்பப்பாடமாக சேர்க்கப்பட்டு ஊக்குவிக்கப்படும் போன்ற பல்வேறு தகவல் கூறப்பட்டிருந்தது இந்நிலையில்,

திமுக எம்பி கனிமொழி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில்,34 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றம் கொண்டுவரப் பட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கையில் ஆக்கப்பூர்வமான எதுவும் இல்லை. குறிப்பாக, அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு, மும்மொழிக் கொள்கை, சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் போன்றவை கல்வித்தரத்தை மேம்படுத்தும் அறிவிப்புகளா?

புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம் ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர் கல்வியை எட்டாக்கனியாக்கும் முயற்சி நடக்கிறது. மாநில உரிமைகள் பறிப்பு, இந்தி திணிப்பு,
சமஸ்கிருத திணிப்பு ஆகியவற்றை திட்டமிட்டு செய்து வருகிறது மத்திய பாஜக அரசு. இதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்

Exit mobile version