Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சுப்புலட்சுமி ஜகதீசன் பதவி விலகியதை தொடர்ந்து துணைப் பொதுச் செயலாளர் ஆகிறார் கனிமொழி? விரைவில் வெளியாகவிருக்கும் அறிவிப்பு!

திமுகவின் முற்க்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ள காரணத்தால் 71 மாவட்ட செயலாளர் பதவிக்கு நடந்த தேர்தலில் 64 மாவட்ட செயலாளர்கள் மீண்டும் அதே பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 7 மாவட்ட செயலாளர்கள் மற்றும் புதிய நபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இதன் அடுத்த கட்டமாக திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோரை தேர்ந்தெடுப்பதற்காக எதிர்வரும் 9ம் தேதி பொதுக்குழு கூடுகிறது.

இதனைத் தொடர்ந்து இந்த பதவிக்கு போட்டியிடுபவர்கள் இன்று வேட்புமான தாக்கல் செய்ய உள்ளார்கள் திமுகவின் தலைவர் பொதுச்செயலாளர் பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் ஏழாம் தேதி அதாவது இன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் தலைமை கழகத்தில் பெற்றுக் கொள்ளப்படும்.

இந்தப் பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர் வேர்த்து மனு கட்டணமாக 50,000 ரூபாய் வழங்கிய ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று திமுகவின் தலைமை கழகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் திமுகவின் தலைவர் பதவிக்கு தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும், பொதுச் செயலாளர் பதவிக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களும், பொருளாளர் பதவிக்கு டி ஆர் பாலு அவர்களும் போட்டியிட இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திமுகவின் தற்போதைய சட்ட விதிகளின்படி 5 பேர் துணை பொதுச்செயலாளர்களாக இருந்து வந்த நிலையில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி சகதீசன் கடந்த செப்டம்பர் மாதம் 20ம் தேதி அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக கூறினார்.

இந்த நிலையில் திமுகவில் பெண்களுக்கான துணைப் பொதுச் செயலாளர் பிரதிநிதித்துவ அடிப்படையில் கனிமொழி நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது திமுகவின் மகளிர் அணி செயலாளராக இருக்கின்ற அவர் புதிய நிர்வாகியை தேர்ந்தெடுக்கும் வரையில் மகளிர் அணி பொறுப்பை கவனிப்பார் என்று தகவல் கிடைத்துள்ளது.

Exit mobile version