ஐஸ்வர்யா ரஜினி : இவர் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” அவர்களின் மகள், இவர் சினிமாத்துறையில் “லால் சாலாம், வை ராஜா வை, 3” போன்ற படங்களை இயக்கினார். இவரது கணவர் “தனுஷ்” மற்றும் இவருக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டால் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுடைய வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஐஸ்வர்யா ரஜினி அவர்கள் பல ஆலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்பவர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவருக்கும் திமுக “எம்பி கனிமொழி” உள்ள நட்பை பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, நானும் கனிமொழி அக்காவும் “20 ஆண்டுகால நண்பர்கள்”, எங்களுடைய நட்பு எங்கே தொடங்கியது என்று தெரியாது, ஆனால் எங்களுடைய “20 ஆண்டுகால உறவு” மிகவும் அழகானது, நான் எப்பொழுது மன குழப்பத்தில் இருக்கிறேனோ அப்போது அவரிடம் தான் கால் பண்ணி பேசுவேன்.
அவருடன் மட்டும் தான் முக்கியமான இடங்களுக்கு செல்வேன். நான் எப்படி பிறந்ததிலிருந்து “சினிமாவில்” இருக்கிறேனோ அதே போல தான் அவரும் பிறந்ததிலிருந்து “அரசியலில்” உள்ளார். எனக்கு சினிமாவை தவிர வேறு ஏதும் தெரியாது, அது போல தான் அவருக்கும் அரசியல் தவிர வேறேதும் தெரியாது. அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, ஆனால் அவர் சார்ந்தவர்கள்தான், நான் எந்த ஊர் கோவிலுக்கு சென்றாலும் என்னை பாதுகாப்பாக அழைத்து செல்கின்றனர், என்று ஐஸ்வர்யா ரஜினி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.