ஆளுநர் பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவருக்கு நேர்ந்த அவமானம்! பதறியடித்து ஓடி வந்த அதிகாரிகள் கண்டுகொள்ளாத எதிர்க்கட்சித் தலைவர்!

0
123

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த சமயத்தில் எதிர்கட்சித் தலைவர் யார் என்ற குழப்பம் அதிமுகவில் எழுந்தது.

அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த ஆளும் தரப்பு எதிர்க்கட்சித் தலைவர் ஓபிஎஸ் அல்லது இபிஎஸ் என்று எழுந்த குழப்பத்திற்கு நடுவே திமுக குட்டையை குழப்ப நினைத்து பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தது.

இதனை கண்டு அதிமுக சுதாரித்துக் கொண்டது. இதன் காரணமாக, எடப்பாடி பழனிச்சாமி தமிழக எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து திமுக அவரை கண்டு சற்றே பயம் கொண்டு தான் இருக்கிறது என்று சொல்லவேண்டும்.

ஏனென்றால் திமுக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திமுக தலைமை கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் சரமாரியாக பதிலளித்தார். இதைக்கண்டு வாயடைத்துப் போன திமுக விழிபிதுங்கி நின்றது.

இதன் காரணமாக, இப்படி திறமை உள்ள ஒருவர் நாம் ஆளும் கட்சியாக இருக்கும் சமயத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தால் நாம் அரசியல் செய்வது கடினம் என்று நினைத்த திமுக பன்னீர் செல்வத்திற்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தது. ஆனால் இது தொடர்பாக அதிமுக தலைமை பெரிதாக எதையும் எடுத்துக் கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.

இந்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக ரவீந்திர நாராயணன் ரவி கடந்த சனிக்கிழமை அன்று பதவியேற்றார். சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எட்டாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனை அறிந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் முருகன் தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து சென்று எடப்பாடி பழனிச்சாமிக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து அவருடன் பேசிக்கொண்டு இருந்தார். இதனை கவனித்த திமுக மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எழுந்துசென்று எடப்பாடி பழனிச்சாமி இடம் முதல் வரிசையில் உங்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. நீங்கள் அங்கே சென்று அமருங்கள் என கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்ட எடப்பாடி பழனிச்சாமி அதெல்லாம் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்து விட்டார். இதன்பின்னர் இந்த நிலை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியிருக்கிறார். கனிமொழி உடனடியாக பதறியடித்துக் கொண்டு ஓடி வந்த அதிகாரிகள் முதல் வரிசையில் வந்து அமருங்கள் என்று தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று சம்பவத்தை திமுகவின் தொழில்நுட்ப பிரிவை சார்ந்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தால் எடப்பாடி பழனிச்சாமி கோபத்தில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.