Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ராகு கேது தோஷம் இருப்பவர்களுக்கு சிறந்த பரிகாரத் தலம்!

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில் பஞ்சபூத தலங்களில் ஒன்று என சொல்லப்படுகிறது. இங்கே சிவபெருமானே மலையாக வீற்றிருப்பதாக ஐதீகமுண்டு. இந்த மலையை சுற்றி தான் கிரிவலப் பாதை இருக்கிறது. 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த கிரிவலப்பாதையில் ஓரிடத்தில் மட்டும் இந்தப் பெரும் அலையை ஒரு சிறு மலை மறைத்து நிற்கிறது.

உண்ணாமலை அம்மாள் பெயரில் இந்த சிறுமலை அழைக்கப்படுகின்றது. சக்தி தனக்குள் சிவனை நிறுத்தி மறைத்து வைத்திருக்கும் சூட்சமம் நிறைந்த இடமாக இந்த இடம் ஆன்மீக வாதிகளால் போற்றப்பட்டு வருகிறது.

இந்த மலையில் கண்ணப்பனார் திருக்கோவிலிருக்கிறது ஒற்றைப் பாதையில் அமைந்த திருக்கோவில் இது கிரிவலப்பாதை முடியும் இடமாக இந்த பகுதி இருக்கிறது. தொடக்க காலத்தில் ரமண மகரிஷி இங்கு அடிக்கடி வந்து சென்றதாக தெரிவிக்கிறார்கள்.

இந்த கோவிலின் கீழ் பகுதியில் ஒரு குகை இருக்கிறது முன் காலத்தில் சித்தர்கள் பலரும் தவம் புரிந்த குகை இது என தெரிவிக்கிறார்கள். திருவண்ணாமலை மலையில் பழங்காலத்தில் புலிகள் வாழ்ந்ததாகவும் சித்தர்கள் வாழ்ந்த இந்த குகைக்குள் புலிகள் வருவதில்லை என்பதனால் இதற்கு புலிப்புகா குகை என பெயர் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான கல்வெட்டு ஆதாரங்களும் இருக்கின்றன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

காளகஸ்தி செல்ல இயலாதவர்கள் நாகதோஷம், ராகு, கேது, தோஷம் இருப்பவர்கள் இந்த கோவிலில் வந்து வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

Exit mobile version