முருகனின் சூரசம்காரம் மற்றும் அவர் செய்த திருவிளையாடல்கள்!

0
146

ஆணவம், அகங்காரம் கொண்டு தேவர்களை சிறை பிடித்து துன்புறுத்திய சூரபத்மனை சம்காரம் செய்ய அவதரித்தவர் தான் முருகப்பெருமான்.

சூரனை வேல் கொண்டு முருகப் பெருமான் சம்காரம் செய்ததை கந்த சஷ்டி விழாவாக ஆலயங்களில் பக்தர்கள் கொண்டாடுகிறார்கள்.

இந்த வருடத்திற்கான கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நேற்று ஆலயங்களில் நடைபெற்றது சூரனை சம்காரம் செய்த போது முருகப்பெருமான் செய்த திருவிளையாடலை இங்கே நாம் காணலாம்.

முருகப்பெருமானுக்கு பார்வதி தேவியார் தன்னுடைய சக்தி மிகுந்த வேலை வழங்க சூரபத்மனுக்கு எதிரான போருக்கு முருகப்பெருமான் கிளம்பினார். பார்வதி தேவியின் பாத சிலம்பில் இருந்து தோன்றிய நவ சக்தியர்களிடமிருந்து நவ வீரர்களான வீரபாகுதேவர், வீரகேசரி, வீர மகேந்திரா, வீர மகேஷ்வரர், வீர புரந்தர், வீர வீரர் மற்றும் லட்சம் வீரர்களும் தோன்றி முருகப்பெருமானின் படைத்தளபதிகளாக விளங்கினார்கள். சூரபத்னையும் அவனுடன் சேர்ந்த அசுரர்களையும் அழித்து தேவேந்திரனுக்கு பட்டாபிஷேகம் செய்து தர்மத்தை நிலை நாட்ட புறப்படுவாயாக என்று முருகப்பெருமானுக்கு சிவபெருமான் அன்பு கட்டளை இட்டார்.

வெற்றிச்சங்கு முழங்கியது, மலர் மாரி பொழிந்தது. தேவசேனாதிபதியின் பெரும்படை செல்லும் வழியில் கிரவுஞ்ச மலை எதிர்ப்பட்டது. அந்த மலைக்கு அதிபதியான சூரபத்மனின் தம்பியாகிய தாரகா

தாரகாசுரனை சம்ஹாரம் செய்து அவன் மார்பில் அணிந்திருந்த திருமாலின் சக்ராயுதம் ஆகிய செம்பொன் பதக்கத்தை முருகப்பெருமான் பெற்றார்.

முருகப்பெருமானின் படைகள் ஏழு கடல்களையும் கடந்து ஆரவாரத்துடன் புறப்பட்டனர். சூரபத்மனின் மகன் பாலகோபன் புறப்பட்டு வந்து முருகப்பெருமான் படையோடு போரிட்டு படுதோல்வி அடைந்து புறமுதுகு காட்டி ஓடினான்.

3வது நாள் போரில் பானுகோபன் கொல்லப்பட்டான். அடுத்ததாக சிங்கமுகசூரன் சிங்கமென சீறிப்பாய்ந்து போர்க்களம் புகுந்தான். ஆனால் முருகப்பெருமானின் வேல் சிங்கமுக சூரணையும் சம்காரம் செய்தது, அவனும் கொல்லப்பட்டான். அடுத்ததாக சூர பத்மன் தலைமை அமைச்சர் தர்ம கோபன், சூரபத்மனின் மக்கள் மூவாயிரம் பேரும் கொல்லப்பட்டனர்.

போரின் முடிவில் மீதம் இருந்தது சூரபத்மன் மட்டுமே. பெரும் படையுடன் போருக்கு வந்த சூரபத்மன் அற்புதமாக மாயப்போர் புரிந்தான். முருகனின் வேலிலிருந்து தப்பிக்க மிருகங்கள், பறவைகள், மரங்கள் என்று மாறி, மாறி மாயத்தால் தப்பி சென்றான். இறுதியில் முருகப்பெருமானின் வேல் படை சூரபத்மனை தேடி சென்று செந்தூர் அருகே இருக்கின்ற மரப்பாடு என்ற மாந்தோப்பில் மறைந்த மாமரத்தை இரு கூராக பிளந்தது சூரபத்மன் ஆணவம், அகங்காரம் அழிந்தது. இரண்டும் சேவலாகவும், மயிலாகவும் உருமாறியது.

அதன் பிறகு முருகப்பெருமானின் வேல் கங்கைக்குச் சென்று மூழ்கி தோஷம் நீங்கி மீண்டும் முருகன் கைக்கு வந்தது. அதனை கடற்கரை ஓரத்தில் பூமியில் குத்த உள்ளே இருந்து நீர் பீறிட்டு வெளியே வந்தது. அந்த நீர் தான் நாழிக்கிணரானது.

அந்த நீரையும், மணலையும் சேர்த்து சிவலிங்கம் செய்து முருகப்பெருமான் சிவ பூஜை செய்தார். விண்ணும், மண்ணும் குளிர்ந்தது. தேவர்கள், முனிவர்கள் மலர் மாரி பொழிந்தார்கள்.

தேவாதி தேவர்கள் புடைசூடர் திருப்பரங்குன்றம் தலத்திற்கு முருகப்பெருமான் வருகை தந்தார். குன்றத்தில் தவம் செய்து வந்த ஆறு முனிவர்களுக்கு திருவருள் புரிந்தார். 6 முனிவர்களும் முருகப்பெருமானை தேவ சிற்பியால் நிர்மாணம் செய்யப்பட்ட பொன்வண்ண கோவிலினுல் எழுந்தருள செய்தனர்.

தேவேந்திரன் தன்னுடைய மகளான தெய்வானையை முருகப்பெருமானுக்கு திருமணம் செய்து கொடுக்க எண்ணி பிரம்மனிடம் தெரிவிக்க, பிரம்மதேவர் முருகனின் மன எண்ணம் என்ன என்பதை அறிந்து கொண்டு அவரிடம் தன்னுடைய விருப்பத்தை முன் வைத்தார். முருகப்பெருமானும் மகிழ்ந்து சம்மதம் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றத்திலேயே மங்கள மண நாள் அன்று ஈரேழு 14 லோகங்களும் வியக்கும் விதத்தில் இந்திரனும், அவர் மனைவி இந்திராணியும் தெய்வானையின் கரம் பிடித்து முருகப்பெருமானிடம் ஒப்படைத்தனர். திருமணம் மிகவும் அற்புதமாக நடந்தேறியது.

சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியை முருகன் தெய்வானை உள்ளிட்டோர் மூன்று முறை சுற்றி வந்து வழிபட்டனர். அதன் பிறகு நான்கு பேரும் திருமணத்திற்கு வந்த எல்லோரையும் ஆசீர்வாதம் செய்தனர். அதன் பின்னர் முருகப்பெருமான் நீலமயில் மீது ஏறி குன்றிலே தேவசேனா தேவியுடன் எழுந்தருளி அருள் பாலித்தார்.

முருகப்பெருமானின் வரலாறுகளையும், சூரசம்காரம் மற்றும் திருக்கல்யாண வைபவங்களையும் உணர்ந்து கந்த சஷ்டி அன்று அவருடைய தரிசனம் பெற்ற எல்லோருக்கும் ஆறுமுக பெருமான் ஆனந்த வாழ்வு தருவார் என்பது ஐதீகம்.