என்னை காதலித்து விட்டு எப்படி வேறொரு திருமணம் செய்து கொள்ளலாம்? கொதித்தெழுந்த காதலனை ஜூஸில் விஷம் கலந்து கொலை செய்த காதலி!

0
208

களியக்காவிளை அருகே கேரளாவில் பாறசாலை மூறியன் கரை பகுதியைச் சார்ந்தவர் சாரோன் ராஜ் இவர் ராமவர்மன் சிறை பகுதியைச் சார்ந்த கிரீஷ்மா என்பவரை காதலித்து வந்தார்.

இந்த நிலையில், இருவரின் காதலுக்கும் கிரீஷ்மாவின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அவருடைய வீட்டில் அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார்கள். நல்ல பணக்கார இடம் என்பதால் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார்கள்.

இந்த நிலையில், பணத்தைப் பார்த்து மயங்கிய அந்தப் பெண் புது மாப்பிள்ளை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்திருந்தார். இவர்களுக்கு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கு நடுவே சரோன் ராஜை எப்படியாவது பிரிந்தாக வேண்டும் என்று அந்தப் பெண் முடிவு செய்து இருக்கிறார். ஆகவே ஷாரோன் ராஜிடம் ஜோதிடம் தொடர்பான நாடகத்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது.

அதற்கு அந்த இளைஞர் மூடநம்பிக்கை என்று தெரிவித்தார் இதனை தொடர்ந்து அந்த இளைஞரை உதறி தள்ளிவிட்டு பணக்கார மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளலாம் என்றால் அவருடன் ஊர் சுற்றிய புகைப்படங்கள், அந்தரங்க புகைப்படங்கள் அனைத்தும் அவரிடம் மாட்டிக் கொண்டிருக்கிறது. நாளை இதை வைத்து தன்னை மிரட்டினால் என்ன செய்வது என்று பயம் கொண்டார் அந்த இளம் பெண்.

இதனால் அந்த நபரை தனியாக சந்தித்த கிரீஷ்மா தன்னுடைய புகைப்படங்களை அவருடைய கைபேசியில் இருந்து அழித்து விடுமாறு தெரிவித்துள்ளார் அதற்கு சாரம் அதெல்லாம் முடியாது என்று மறுத்துள்ளார் இதனால் ஏமாற்றம் அடைந்த கிரீஷ்மா ஒரு நாள் சாரோனை வீட்டிற்கு வர வைத்துள்ளார். அங்கே வைத்து தனக்கும் மற்றொரு நபருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததை தெரிவித்துள்ளார்.

இது அந்த இளைஞருக்கு அதிர்ச்சியை வழங்கியது. இதனைத் தொடர்ந்து கோபமடைந்த சாரோன் என்னை காதலித்து விட்டு எப்படி மற்றொருவரை திருமணம் செய்து கொள்ளலாம்? இன்னொருவருடன் உன்னை சந்தோஷமாக வாழ விட்டு விடுவேனா? எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க விடமாட்டேன் என்று மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து இருவருக்கும் இடையே வாய் தகராறு உண்டாகியுள்ளது அப்போதுதான் கிரஷ்மா ஒரு மிகப்பெரிய திட்டத்தை வகுத்துள்ளார் அவர் சரோனை சமாதானப்படுத்துவதை போல நடித்து நான் உனக்கு வேண்டுமென்றால் ஒரு ஜூஸ் சவாலை ஏற்றுக் கொள்வாயா என்று கேட்டுள்ளார். இதனை நம்பிய சாரோன் அவ்வளவுதானே ஏற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

உடனடியாக அந்த கசாயத்தில் பூச்சி மருந்தை கலந்து அந்த நபரிடம் கொடுத்துள்ளார் கிரீஷ்மா. இது வயிறு வலிக்கு நல்லது எனக்கு வயிறு வலித்தால் இதைத்தான் குடிப்பேன் ஆனால் கொஞ்சம் கசக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அந்த இளைஞர் எனக்கு வயிறு வலி எல்லாம் கிடையாது. எனக்கு வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த பெண் கட்டாயப்படுத்தி சாரோனுக்கு கொடுத்ததாகவே தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மெல்ல, மெல்ல சரோனின் உடல் உறுப்புகள் செயலிழக்க தொடங்கி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றும் சொல்லப்படுகிறது.