இருவருக்கு கப்பா வகை வைரஸ்! பீதியில் பொதுமக்கள்!

0
217
Kappa type virus for two! Public in panic!

இருவருக்கு கப்பா வகை வைரஸ்! பீதியில் பொதுமக்கள்!

கொரோனா தொற்றானது சீனாவிலிருந்து ஆரம்பித்து இன்றளவும் முடிவு தெரியாமல் பரவி வருகிறது.அதற்கடுத்ததாக பல வைரஸ்கள் பரவி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.அந்தவகையில் கொரோனா தொற்றுக்கு பிறகு கருப்பு பூஞ்சை,வெள்ளை பூஞ்சை போன்ற வைரஸ்கள் பரவி மக்களை மிகவும் பயப்பட செய்தது.அத்தொற்றினாலும் தமிழ்நாட்டில் சிலர் உயிரிழந்தனர்.அந்த வைரஸானது சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகளவு பரவும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

அதற்கடுத்ததாக தற்போது கேரளாவில் ஜிகா வைரஸ் என ஒன்று உருவாகி பரவியும் வருகிறது.ஒவ்வோர் வைரஸ்களும் இவ்வாறு உருவாகி வருவதால் பொதுமக்களால் சாதரணமான நடைமுறை வாழ்க்கையை வாழ முடியவில்லை.இந்த வைரஸ் தாக்குதலுக்கு கர்ப்பிணி பெண்கள் உட்பட 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த வைரஸ் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.நேற்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்தது.அந்த பேட்டியில் அதிகாரிகள் கூறியதாவது,ரஷ்யா.இங்கிலாந்து போன்ற நாடுகளில் அரசாங்கம் கூறும் விதிமுறைகளை மக்கள் கடைபிடிக்க மறுத்ததால் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது.அதேபோல தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை சற்று குறைந்து காணப்பட்டதால்  அரசாங்கம் சில தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தளர்வுகளினால் மக்கள் வெளியே செல்லும்போது முகக்கசம் அணியாமலும்,சமூக இடைவெளி கடைபிடிக்காமலும் செல்கின்றனர்.இதனால் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.அதனால் பொது மக்கள் அனைவரும் கொரோன விதிமுறைகளை கடிபிடித்து நடக்க வேண்டும் எனக் கூறினார்கள்.அவர்கள் மேலும் கூறியதாவது,தற்போது வரை இந்தியாவில் யாருக்கும் லாம்ப்டா வகை கொரோனா வைரஸ் காணப்படவில்லை.ஆனால் டெல்டா பிளஸ் வைரஸ்கள் காணப்படுகின்றனர்.அத்தோடு கப்பா வகை வைரஸ் தற்போது பரவியுள்ளது.உத்திரபிரதேசம் மாநிலத்தில் இருவருக்கு கப்பா வகை வைரஸ் பரவியுள்ளது.

இந்த கப்பா வைரஸானது டெல்டா வகை போன்று மிகவும் ஆபத்தானவையே என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.இது அதிகளவு பரவாமலிருக்க மக்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து நடக்க வேண்டும் எனக் கூறினார்கள்.அத்தோடு ஜிகா வைரஸ் கேரளாவில் காணப்படுவதால் அம்மாநிலத்தை கண்காணிக்க ஒன்றிய நிபுணர் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்றை கண்காணிக்கவும் மாநில அரசுக்கு உதவவும் எய்ம்ஸ்  மருத்துவமனையிலிருந்து 6 பேர் கொண்ட ஒன்றிய நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதார அமைச்சக இணை செயலாளர் லாவ் அகர்வால் நேற்று அளித்த பேட்டியில் கூறினார்.