சமீபத்தில் ரவி மோகன் நடிப்பில் வில்லன் டீஸர் மக்கள் மத்தியில் பரபரப்பாக வரவேற்கப்பட்டது. தற்சமயம் அதை முறி அடிக்கும் வகையில் கராத்தே பாபுவின் டீசர் வெளிவந்து வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் டாடா படத்தை இயக்கிய கணேஷ் பாபு இப்படத்தை இயக்க உள்ளார். மேலும் டீசர் மூலமாக முற்றிலும் அரசியலுக்களம் என்று தெரிய வருகின்றது. அதில் குறிப்பிட்டுள்ள வாசகங்களும் மேலும் அப்படத்தை டெம்ப்ட் செய்து வருகின்றது.
இது அரசியல் களம் கண்ட ஒருவரின் வாழ்க்கை வரலாறு என்று தற்சமயம் பரவி வருகின்றது. இந்த படம் முற்றிலும் வட சென்னையை மையமாக வைத்து எடுக்கப் போவதாகவும், மக்களின் அரசியல் முடிவு மாற்றங்களை எடுத்துரைக்கும் வகையிலும் இந்த கதைக்களம் அமையும் என்று கணேஷ் பாபு தெரிவித்துள்ளார். இது ஒரு எமோஷனல் ஆன பாலிடிக்ஸ் திரில்லர் மூவி எனவும் குறிப்பிட்டுள்ளார். இது அமைச்சர் சேகர் பாபுவின் வரலாற்று கதையாக இருக்கும் என ஒரு செய்தி பரவி வருகின்றது.
அதிமுக மூலம் அரசியல் களம் கண்ட சேகர்பாபு இரண்டு முறை ஆர் கே நகரில் ஜெயித்துள்ளார். இவரே திமுகவில் அதே பகுதியில் போட்டியிடும் போது தோல்வி அடைந்துள்ளார். தற்சமயம் இந்து அறநிலையத்துறை அமைச்சராக தனது பணியை மேற்கொண்டு வருகிறார். இவரை மையமாக வைத்து இக்கதைகளம் உருவாகுவதாக தகவல் கசிகின்றன.