Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீதிமன்றத்திற்கு பதிலடி கொடுத்த கர்ணன்!

Karnan to win next National Award Fans flooded with joy!

Karnan to win next National Award Fans flooded with joy!

நீதிமன்றத்திற்கு பதிலடி கொடுத்த கர்ணன்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் தான் கர்ணன்.இதில் தனுஷ் மற்றும் இவருக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார்.இந்த படத்தை தாணு தயாரித்துள்ளார்.மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமத்துள்ளார்.இப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளி வரும் என அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.ஆனால் இந்த படத்தில் பண்டாரத்தி புராணம் என்ற பாடல் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவு படித்தி பாடியுள்ளதாக புல்லட் ராஜி என்பவர் மதுரை நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

அந்த வழக்கில் அவர் கூறியிருந்தது கர்ணன் படத்தில் இடம் பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் என்னும் பாடலானது குறிப்பிட்ட சமூதாயத்தை இழிவு படுத்தி பாடியுள்ளனர்.அந்த படத்தில் அப்பாட்டை நீக்கம் செய்த பிறகே படத்தை  வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று இயக்குனர் மாரி செல்வராஜ்,தனுஷ்,மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

இதற்கு  பதிலடியாக மாரி செல்வராஜ் கூறியது,நம் சமூக அடுக்குமுறை உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது புரிந்துக்கொள்ள முடியாததாகவும்,விலக்க முடியாததாகவும் இருக்கிறது.அதன் அடிப்படையில் ‘பண்டாரத்தி புராணம்’என்ற பாடலின் விவாதத்தையும் கோரிக்கையையும் முடித்து வைப்பதற்காக இனி பண்டாரத்தியை இனி மஞ்சனத்தி என்று அழைக்கலாம் என முடிவு செய்து இருக்கிறோம் எனக் குறிபிட்டுள்ளார்.

இதனால் இனி பண்டாரத்தி என்னும் பாடல் மஞ்சனத்தி புராணம் என்று அழைக்கப்படும்.

Exit mobile version