காவிரி நீர் தர விருப்பம் இல்லாத கர்நாடக அரசு!!! முழுக் கடையடைப்பு நடத்தும் நாகப்பட்டினம் மாவட்டம்!!!
காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட விருப்பம் இல்லாத கர்நாடகா அரசை கண்டித்து தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடைகளை அடைத்து முழு அடைப்பு போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறந்துவிட வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் நடுவர் அவர்களும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
ஆனால் கர்நாடகா அரசு நீதிமன்ற உத்தரவையோ அல்லது காவிரி நடுவர் தீர்ப்பையோ ஒரு பொருட்டாக மதிக்காமல் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றது. இதையடுத்து மத்திய அரசானது தமிழகத்திற்கு காவிரி நதி நீரை கர்நாடக அரசு திறந்துவிட அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்பட 8 மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டங்கள் எல்லாம் நடைபெற்று வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வணிகர்கள் 12000 கடைகளை அடைத்து கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாகூர், திருமருகல், கீழ்வேளூர், வேதாரண்யம், தலைஞாயிறு உள்பட பல பகுதிகளில் மருந்தகம், பால் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயங்கி வருகின்றது. மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமில்லாமல் கார், வேன், ஆட்டை ஓட்டுநர்களாம் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சுற்றுலா தலமான வேளாங்கண்ணி பகுதியில் இன்று(அக்டோபர்11) மாலை 5 மணி வரை அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. கார், ஆட்டோ உள்பட வாகனங்களும் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வழக்கம் போல இயங்குகின்றது.
மேலும் மத்திய அரசு அலுவலகங்களின் முன்னிலையில் கர்நாடக அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் கர்நாடக அரசை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.