மகளிர் திட்டத்தில் தமிழகத்தை முந்தியது கர்நாடக அரசு!!

0
102

மகளிர் திட்டத்தில் தமிழகத்தை முந்தியது கர்நாடக அரசு:-

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும் கிரகலட்சுமி திட்டம் கர்நாடக மாநிலத்தில் ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்.

கர்நாடக மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2.000 வழங்கும் ‘கிரகலட்சுமி’ திட்டத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் ராகுல் காந்தி தொடக்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலமாக 1.33 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்றும் இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ. 18 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

 

கர்நாடக சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் அறிவித்த முக்கிய திட்டங்கள் :-

“கிரஹ ஜோதி திட்டம்” – அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் |

“கிரகலட்சுமி திட்டம்” – வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம்.

“அன்ன பாக்யா திட்டம்” – வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம்.

“யுவ நிதி திட்டம்” – வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரமும், வேலையில்லா பட்டயப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு மாதம் 1500 ரூபாயும். 2 ஆண்டுகளுக்கு வழங்கும் திட்டம்.

“உசித பிரயாணா திட்டம்” – பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் திட்டம்.

தற்போது கர்நாடக மாநிலத்தை ஆட்சி செய்து வரும், காங்கிரஸ் அரசின் பல்வேறு புதிய திட்டங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.