Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதலிடம் பிடித்தது தமிழகம்! எந்த விஷயத்தில் தெரியுமா?

ரத்த உறவில் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடு, ரத்தசோகை அல்லது மரபணு பிரச்சனை, உண்டாவதற்கான வாய்ப்பு அதிகமாகவுள்ளதாக அறிவியல் ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே யாரும் இரத்த உறவில் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று பலரும் அறிவுறுத்தி வருகிறார்கள். இருந்தாலும், தென் மாநிலங்களில் இரத்த உறவுத் திருமணங்கள் தான் அதிகளவில் நடைபெற்று வருகிறது.

இந்த ரத்த உறவு திருமணங்களில் கர்நாடக மாநிலம் 2வது இடத்தைப் பிடித்திருக்கிறது, கர்நாடகத்தில் 27 சதவீத மக்கள் இரத்த உறவில் திருமணம் செய்துகொள்வது தேசிய குடும்ப சுகாதார அமைப்பு நடத்திய ஒரு ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் 9.6 சதவீதம் பெண்கள் தந்தைவழி இரத்த உறவிலும், 13.9 சதவீத பெண்கள் தாய்வழி இரத்த உறவிலும், திருமணம் செய்து கொள்கிறார்கள்.

ஆகவே இந்த திருமணங்களால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சில பிரச்சனைகள் உண்டாவதற்கான வாய்ப்பிருப்பதாகவும், சொல்லப்படுகிறது. இதனை தடுப்பதற்காக இரத்த உறவுமுறை திருமணங்களை தடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

தென்மாநிலங்களில் ரத்த உறவு திருமணங்களில் தமிழ்நாடு முதலிடத்திலிருக்கிறது. அதாவது தமிழகத்தில் 28% இரத்த உறவுத் திருமணங்கள் நடக்கிறது என்கிறார்கள்.

ஆந்திராவில் 26 சதவீத இரத்த உறவு திருமணமும், புதுச்சேரி 19 சதவீதமும், தெலுங்கானாவில் 18 சதவீதமும், இரத்த உறவுத் திருமணங்கள் நடப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

Exit mobile version